கெட்ட கோலஸ்ட்ராலை ஓட ஓட விரட்டும் உணவுகள்: கண்டிப்பா சாப்பிடுங்க
கொலஸ்ட்ரால் என்பது நம் இரத்தத்தில் இருக்கும் கொழுப்பு போன்ற ஒரு பொருளாகும். இது உடலின் ஹார்மோன்களை உற்பத்தி செய்வதற்கும், வைட்டமின் டி உற்பத்தி செய்வதற்கும், உணவை ஜீரணிப்பதற்கும் உதவுகிறது.
கொலஸ்ட்ரால் (Cholesterol)
கொலஸ்ட்ரால் இரண்டு வகைப்படும். ஒன்று LDL அதாவது கெட்ட கொலஸ்ட்ரால் மற்றொன்று HDL அதாவது நல்ல கொலஸ்ட்ரால். ஆனால் உடலில் கொலஸ்ட்ரால் அதிகரிப்பது ஆரோக்கியத்திற்கு மிகவும் ஆபத்தானது. இதனால் உடலில் பல வித நோய்களும் ஏற்படுகின்றன. கொலஸ்ட்ரால் அதிகரிப்பதால் ஏற்படும் பிரச்சனையால் ஆபத்தான பல நோய்களும் ஏற்படுகின்றன. அதிக கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளவர்கள் சில குறிப்பிட்ட உணவுகளை உட்கொள்ள வேண்டும். கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளவர்கள் தங்கள் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டிய உணவுகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
கெட்ட கொலஸ்ட்ராலுக்கான உணவு (Foods To Control High Cholesterol):
கெட்ட கொழுப்பைக் கட்டுப்படுத்த இந்த உணவுகள் உதவும்:
1. முழு தானியங்கள்:
முழு தானியங்கள் (Whole Grains) எல்டிஎல் கொழுப்பைக் குறைக்கும். இது நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்க கூடியது. கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்க விரும்பினால் முழு தானியங்களை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.
2. அதிக நார்ச்சத்து:
கெட்ட கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்த ஆப்பிள், பேரிக்காய், பெர்ரி போன்ற நார்ச்சத்து (Fibre) அதிகம் உள்ள உணவுகளை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இவற்றை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்கலாம்.
3. மீன்:
கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்த, சால்மன், கானாங்கெளுத்தி, சூரை, மத்தி, ரெயின்போ ட்ரவுட் போன்ற மீன்களை (Fish) உட்கொள்ளலாம்.
4. சியா விதைகள்:
சியா விதைகள் (Chia Seeds) ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகின்றன. சியா விதைகளை உணவில் சேர்த்துக்கொள்வது எல்.டி.எல் உடன் இரத்த அழுத்தத்தின் அளவைக் குறைக்கும்.
5. வெந்தயம்
நமது சமையலில் நாம் தினமும் பயன்படுத்தும் மசாலா பொருட்களில் வெந்தயம் முக்கியமானதாகும். இயற்கையான முறையில் எல்டிஎல் கொழுப்பை குறைகக் நினைப்பவர்களுக்கு வெந்தயம் (Fenugreek) மிக உதவியாக இருக்கும். வெந்தயத்தில் கரையக்கூடிய நார்ச்சத்து நிரம்பியுள்ளது. இது கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கும். வெந்தய விதைகள், வெந்தய நீர், வெந்தய பொடி, வெந்தயக் கீரை என பல வழிகளில் இதை பாயன்படுத்தி கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்தலாம்.
6. கிரீன் டீ
(Green Tea) பன்முகத்தன்மை உள்ள பானமாகும். கொலஸ்ட்ரால் அளவை குறைக்கும் பல கூறுகள் இதில் உள்ளன. கொலஸ்ட்ரால் அளவை குறைப்பதோடு உடல் எடையை குறைக்கவும் இது மிகவும் உதவுகின்றது. இந்த தேநீரில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் கொலஸ்ட்ரால் அளவை குறைக்க உதவும்.
7. ஓட்ஸ்
எந்த மருந்தும் இல்லாமல் இயற்கையாகவே உங்கள் கெட்ட கொழுப்பின் அளவைக் கட்டுப்படுத்த விரும்பினால் ஓட்ஸ் (Oats) ஒரு நல்ல வழியாக இருக்கும். ஓட்ஸ் பீட்டா-குளுக்கனின் நல்ல மூலமாகும், இது ஒரு வகை கரையக்கூடிய நார்ச்சத்து. இது கொழுப்பின் அளவைக் குறைக்க உதவுகிறது. இதை காலை உணவில் சேர்ப்பது கொலஸ்ட்ராலை குறைக்க ஒரு நல்ல வழியாக இருக்கும்.
(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)