பேக்கரி கடைக்கு பணிந்த எலான் மஸ்க்! திருப்பி செலுத்தப்பட்ட 2000 டொலர் கடன்

டெக்னாலஜி துறையின் முன்னோடி எலான் மஸ்க் பேக்கரி தொடர்பான சர்ச்சைக்கு பதிலளித்துள்ளார்.

எலான் மஸ்க் மீது பேக்கரி குற்றச்சாட்டு
கலிபோர்னியாவில் உள்ள ஒரு சிறிய பேக்கரி, ” The Giving Pies” அவர்கள் டெஸ்லா நிகழ்வுக்காக 4,000 மினி பைகளை(Pies) சுட்டெடுத்துள்ளனர்.

ஆனால் கடைசி நிமிடத்தில் இந்த ஆர்டர் ரத்து செய்யப்பட்டதால், பேக்கரி உரிமையாளர் வோஹங்கி ரசெதரினேரா (Voahangy Rasetarinera) அதிர்ச்சியடைந்துள்ளார்.

மேலும் அவருக்கு இதில் ரூ.1,40,000 ($2,000) செலுத்தப்படாத தொகையும் மீதம் இருந்துள்ளது.

சமூக ஊடகத்தில் வைரலான விவகாரம்
இந்த கதை விரைவாக இணையத்தில் பரவி, பலர் எலான் மஸ்க் மற்றும் டெஸ்லா நிறுவனத்தை சிறு வணிகரிடம் காட்டிய அணுகுமுறையை விமர்சித்தனர்.

#PayTheBakery என்ற ஹேஷ்டேக் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் செய்து, பில்லியனர் மற்றும் அவரது நிறுவனத்தின் மீது மேலும் அழுத்தம் கொடுத்தனர்.

பதிலளித்த Elon Musk
பொதுமக்கள் கண்டனத்தை எதிர்கொண்ட எலான் மஸ்க், இறுதியில் இந்த சூழ்நிலைக்கு பதிலளித்தார்.

தவறை ஒப்புக்கொண்டு, பேக்கரி கடன் தொகையை முழுமையாக செலுத்த ஒப்புக் கொண்டார். கூடுதலாக, மில்லியன் கணக்கானோர் பின்தொடரும் தனது சமூக ஊடக பக்கம் மூலமாக பேக்கரியை பிரபலப்படுத்தியதுடன், Tesla நிறுவனத்தின் சிறந்த முயற்சிகளை மக்கள் எப்போதும் நம்ப வேண்டும் என X தளத்தில் பதிவிட்டார்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *