இந்திய பயணிகளுக்கு Visa சலுகை அறிவித்த Emirates நிறுவனம்: யார் யாரெல்லாம் பயன்பெறலாம்

ஐக்கிய அரபு அமீரகத்தின் எமிரேட்ஸ் விமான சேவை நிறுவனமானது சில இந்திய கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களுக்கு முன் அங்கீகரிக்கப்பட்ட visa-on-arrival வசதியை அறிவித்துள்ளது.

எமிரேட்ஸ் விமான சேவை
குறித்த வசதியானது, எமிரேட்ஸ் விமான சேவையை முன்பதிவு செய்துள்ள வாடிக்கையாளர்களுக்கு மட்டும் அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும், 14 நாட்கள் single entry விசா உடன், எமிரேட்ஸ் வாடிக்கையாளர்கள் இனி துபாய் சென்றதும் விமான நிலையத்தில் நீண்ட வரிசையில் காத்திருக்கும் தேவையும் இருக்காது.

சாதாரண கடவுச்சீட்டு வைத்திருக்கும் இந்தியர்கள் 6 மாதங்கள் வரையில் செல்லுபடியாகும் visa-on-arrival வசதியை பயன்படுத்திக்கொள்ள முடியும். ஆனால் அந்த இந்தியர்கள் கண்டிப்பாக அமெரிக்க விசா அல்லது வதிவிட உரிமம் அல்லது ஐரோப்பிய ஒன்றியம் அல்லது பிரித்தானிய குடியுரிமை பெற்றவர்களாக இருத்தல் வேண்டும்.

இப்படியானவர்களுக்கு 2017ல் இருந்தே visa-on-arrival வசதி விமான நிலையங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தற்போதைய புதிய சேவையானது, வாடிக்கையாளர்கள் விமான நிலையத்தில் காத்திருக்காமல் எளிதாக்கப்பட்டுள்ளது.

2 மில்லியன் இந்தியர்கள்
இதற்கு கட்டணமாக 47 அமெரிக்க டொலரும் சேவை கட்டணமாக 18.50 அமெரிக்க டொலரும் வசூலிக்கப்பட உள்ளது. எமிரேட்ஸ் விமானத்தில் பயணச்சீட்டு பதிவு செய்யும் போதே வாடிக்கையாளர்கள் விசாவுக்கான விண்ணப்பமும் முன்னெடுக்கலாம்.

முறையான தரவுகளை சமர்ப்பித்த பின்னர் அரசாங்கம் உரிய நடவடிக்கை முன்னெடுக்கும். ஐக்கிய அமீரகத்தின் சுற்றுலா நிர்வாகம் வெளியிட்டுள்ள தரவுகளின் அடிப்படையில், 2023 ஜனவரி முதல் அக்டோபர் வரையில் 2 மில்லியன் இந்தியர்கள் துபாய் சென்றுள்ளனர்.

எமிரேட்ஸ் விமான சேவை நிறுவனம் தற்போது 167 வாராந்திர விமான சேவைகளுடன் இந்தியாவில் பெங்களூரு, சென்னை, டெல்லி, ஹைதராபாத், கொச்சி உள்ளிட்ட ஒன்பது நகரங்களுக்கு சேவை செய்கிறது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *