Emirates flight: வெறும் 2 பேருடன் சென்ற எமிரேட்ஸ் விமானம்-எங்கு தெரியுமா?
ஒரு தாயும் மகளும் விடுமுறைக்காக எமிரேட்ஸ் விமானத்தில் ஏறியபோது அவர்களுக்கு ஆச்சரியம் காத்திருந்தது. சீஷெல்ஸில் இருந்து சுவிட்சர்லாந்து சென்ற விமானத்தில் எகானமி கிளாஸ் கேபினில் அவர்கள் இருவர் மட்டுமே இருந்தனர்.
25 வயதான ஜோ டோயல் மற்றும் அவரது தாயார் கிம்மி சேடல் (59) ஆகியோர் டிசம்பர் 25 ஆம் தேதி விடுமுறையைக் கழிக்க விமானத்தில் ஏறியபோது அவர்கள் மட்டும் அங்கு இருந்ததை கண்டு ஆச்சரியம் அடைந்தனர்.
முதலில் டிக்டாக்கில் பகிரப்பட்ட இந்த வீடியோவில், டோயல் வெற்று விமானத்தில் நடனமாடுவதைக் காட்டுகிறது. அந்த வீடியோவில் கேபின் க்ரூ உறுப்பினர் ஒருவர் தனது தலைக்கவசத்தை செடல் மீது அணிவதைக் காட்டுகிறது. வீடியோவில், “பிஓவி: நீங்கள் மட்டுமே விமானத்தில் இருக்கிறீர்கள்” என்று எழுதப்பட்டுள்ளது.
“நாங்கள் மட்டும்தான் இருக்கிறோம் என்று எங்களுக்குத் தெரியாது. மேலும் நான்கு பேர் முதல் வகுப்பில் இருந்தனர் என்று நான் நினைக்கிறேன், ஆனால் அவர்களது கேபின் தனி. எனவே நாங்கள் மட்டுமே இருந்தோம்” என்று அவர்கள் தெரிவித்தனர்.
“இது சீஷெல்ஸில் மழைக்காலம் என்பதாலும், கிறிஸ்துமஸ் தினம் என்பதாலும், யாரும் விமானத்தில் பயணிக்கவில்லை என்று நான் நினைக்கிறேன்” என்று அவர் மேலும் கூறினார்.