எம்மி விருதுகள் அறிவிப்பு… விருது வென்றவர்கள் பட்டியல் இதோ..!
தமிழ் ரசிகர்கள் தமிழ் திரைப்படங்கள் மட்டுமில்லாமல், அனைத்து மொழி படங்களையும் ரசிக்கத் தொடங்கி விட்டனர். கோலிவுட் படங்கள் மட்டுமன்றி, டோலிவுட், மோலிவுட், சாண்டல்வுட் மற்றும் ஹாலிவுட் திரைப்படங்களுக்கும் வரவேற்பு அளித்து வருகின்றனர். ஆரம்பத்தில் ஆங்கிலப் படங்கள் ஒன்று அல்லது இரண்டு இந்தியாவில் வெளியாவதே பெரிய விஷயம். ஆனால், தற்போது ஆங்கிலத்தில் எடுக்கப்படும் பெரும்பாலான படங்கள் தமிழிலும் டப் செய்யப்பட்டு வெளியிடப்படுகின்றன. அதுமட்டுமன்றி ஹாலிவுட் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் தமிழ் ரசிகர்கள் கண்டு களிக்கின்றனர்.
அந்த வகையில், டிவி தொடர்கள், நிகழ்ச்சிகள், ஓடிடி தொடர்கள் ஆகியவற்றை கௌரவிக்கும் விதமாக எம்மி விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி நடப்பு ஆண்டுக்கான 75-வது பிரைம் டைம் எம்மி விருதுகள் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கோலாகலமாக நடைபெற்றது. இதில் பல்வேறு பிரிவுகளில் சிறந்த படைப்புகள் மற்றும் கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. 4 மாதங்கள் தாமத்திற்கு பிறகு இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது.
இதில், சிறந்த நகைச்சுவை முன்னணி நடிகர் ஜெர்மி ஆலனுக்கு தி பியர் தொடருக்கான வழங்கப்பட்டது. அதேபோல, நகைச்சுவை தொடரில் முன்னணி நடிகை விருது குயின்டாவுக்கும், துணை நடிகருக்கான விருது மாத்யூ மக்பேடியனுக்கும், சிறந்த துணை குறுந்தொடர் நடிகருக்கான விருது பால் வால்டர் ஹவுசருக்கும் கொடுக்கப்பட்டது. அதேபோல, கிறிஸ்டோபர் ஸ்டோர் , சாரா ஸ்னூக், ஸ்டீவன் யூன், எல்லி வோங் ஆகியோரும் விருதுகள் வென்றனர்.