டின்னரை இரவு 7.30 மணிக்குள்ள முடிச்சுடுங்க… அப்புறம் பாருங்க மேஜிக்கை!
சரியான நேரத்தில் இரவு உணவை உட்கொள்வது உங்கள் உடலுக்கு ஆரோக்கியத்தில் அதிசயங்களைச் செய்யும். சுறுசுறுப்பாகவும், புத்துணர்ச்சியுடன் இருக்க, ஒருவர் இரவு உணவை இரவு 7 முதல் 7:30 மணிக்குள் சாப்பிட வேண்டும். நாளின் கடைசி உணவை சரியான நேரத்தில் சாப்பிடுவதால் இன்னும் பல நன்மைகள் உள்ளன, ஆனால் இரவில் சீக்கிரம் சாப்பிடுவது என்னென்ன நன்மை பயக்கும் என்பதை நாங்கள் உங்களுக்குச் சொல்வோம்.
இரவு உணவை சீக்கிரம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
தூக்கமின்மை பிரச்சனை நீங்கி நிம்மதியான தூக்க கிடைக்கும்:
நாள் முழுவதும் சோர்வாக இருக்கும் நிலையில் சரியான நேரத்தில் உணவைப் சப்பிட்டால், நீங்கள் தூங்குவதற்கு போதுமான நேரம் கிடைக்கும். காலையில் நீங்கள் புத்துணர்ச்சியுடன் இருப்பீர்கள். நீங்கள் சீக்கிரமே இரவு உணவை உண்ணும் போது, உங்கள் உடலுக்கு உணவை ஜீரணிக்கவும் ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதற்கும் அதிக நேரம் கிடைக்கும்
இதனால் ஆற்றல் அளவு குறையாமல் இருக்கும். மெலடோனின் என்னும் மன அழுத்தத்தை போக்கும் ஹார்மோன் சுரப்பது சீரடைந்து ஆற்றல் அதிகரிக்கும்.
செரிமான பிரச்சனைகள் நீங்கும்:
சிலர் இரவு உணவு சாப்பிட்ட உடனேயே படுக்கைக்குச் செல்வார்கள். இப்படி செய்வதால் வாயு பிரச்சனை அதிகரிக்கிறது. நீங்கள் வயிறு நிறைந்து படுக்கும்போது ஏற்படும் அமில வீச்சு அல்லது அஜீரணம் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இரவு உணவை சீக்கிரமாக முடிப்பதன் மூலம், செரிமான சிறப்பாக இருப்பதால், ஆசிடிட்டி, வாயு போன்ற பிரச்சனைகள் இருக்கவே இருக்காது.
இதயம் ஆரோக்கியமாக இருக்கும்:
உணவு சரியாக ஜீரணமாகும்போது, கொழுப்பு மற்றும் கொலஸ்ட்ரால் பிரச்சனை இருக்காது, உங்கள் இதயம் ஆரோக்கியமாக இருக்கும். உண்மையில் பார்த்தால், செரிமான பிரச்சனை தான் பல பிரச்சனைகளுக்கு காரணமாக இருக்கிறது.
உடல் எடை கட்டுப்படுத்தப்படுகிறது:
உடல் எடையை குறைக்க, இரவில் சீக்கிரம் சாப்பிடுவது அவசியம். சீக்கிரம் சாப்பிட்டுவிட்டு இரவில் சிறிது நடக்க வேண்டும். இப்படி செய்வதால் உங்கள் உணவு சரியாக ஜீரணமாகி, கொழுப்பும் சேராது. உடல் எடை கட்டுக்குள் இருக்கும். மேலும் வளர்சிதை மாற்றம் அதிகரிப்பதால், உடல் பருமன் வேகமாக குறைகிறது.
அனைத்து வயிற்று நோய்களும் நீங்கும்:
உங்கள் தூக்கத்திற்கும் இரவு உணவிற்கும் இடையில் இடைவெளியை பராமரிக்க அடிக்கடி அறிவுறுத்தப்படுகிறது. ஏனென்றால், நீங்கள் சாப்பிட்ட உடன் படுத்தால், உணவு சரியாக ஜீரணமாகாமல், வயிற்று வலி, அமில வீச்சு மற்றும் வீக்கம் ஏற்படலாம்.
அதிக சுறுசுறுப்புடன் இருப்பீர்கள்: நேரத்துக்கு உணவு உண்பதன் மூலமும், நேரத்துக்கு உறங்குவதன் மூலமும், காலையில் அதிக ஆற்றலுடன் இருப்பீர்கள்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும்.