நரம்பு நோய்களுக்கு எதிரி.. மாதுளை பழத்தில் இத்தனை பலன்களா?

ஆரோக்கியமான உணவுகள் பற்றி எக்கச்சக்கமான கருத்துகள் நிலவி வருவதால் எந்தெந்த உணவுகளை சாப்பிட வேண்டும், எந்தெந்த உணவுகளை சாப்பிடக்கூடாது என்பதில் நமக்கு இயற்கையாகவே சந்தேகம் எழுகிறது. ஆகவே இந்த பதிவில் மாதுளம் பழம் பற்றிய ஒரு சில முக்கியமான விஷயங்களை தெரிந்து கொள்ளலாம். மாதுளம் பழங்களை உங்களது அன்றாட உணவின் ஒரு பகுதியாக எதற்காக எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதற்கான ஒரு சில காரணங்களையும், நல்ல மாதுளம் பழங்களை தேர்வு செய்வதற்கான ஒரு சில குறிப்புகளை பற்றியும் பார்க்கலாம்.

மாதுளம் பழம் சிறந்த உணவுகளில் ஒன்றாக கருதப்படுவதற்கான காரணம் என்ன?

மாதுளம் பழத்தில் உள்ள எக்கச்சக்கமான ஆரோக்கிய நலன்கள் மற்றும் சிறந்த ஊட்டச்சத்து மதிப்பு காரணமாக அது சிறந்த உணவுகளில் ஒன்றாக கருதப்படுகிறது. மாதுளம் பழங்களில் ஆன்டி-ஆக்சிடன்ட்கள் குறிப்பாக பாலிபீனால்கள் மற்றும் அந்தோசயானின்கள் நிறைந்துள்ளது. இந்த காம்பவுண்டுகள் நமது உடலில் ஆக்ஸிடேட்டிவ் அழுத்தம் மற்றும் வீக்கத்தை ஏற்படுத்தும் ஃப்ரீ ரேடிக்கல்களை சமநிலைப்படுத்துவதற்கு உதவுகிறது.

மேலும் மாதுளம் பழங்கள் வைட்டமின் C பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்து உட்பட அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களின் சிறந்த மூலமாக அமைகிறது. மாதுளம் பழங்களில் உள்ள உணவு நார்ச்சத்து செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தி மலச்சிக்கலை போக்குவதற்கு உதவுகிறது.

நாள்பட்ட வீக்கம் காரணமாக ஏற்படக்கூடிய ஆர்த்ரைடீஸ் மற்றும் வீக்க கோளாறுகளுக்கு எதிராக மாதுளம் பழத்தில் உள்ள வீக்க எதிர்ப்பு பண்பு செயல்படுகிறது. தினமும் மாதுளம் பழம் சாப்பிடுவது அறிவு திறன் மற்றும் நினைவாற்றல் மேம்பாட்டுடன் தொடர்புடையதாக அமைகிறது. அது மட்டுமல்லாமல் அல்சைமர் போன்ற நரம்பு சம்பந்தப்பட்ட நோய்கள் தவிர்க்கப்படுகிறது.

மாதுளம் பழங்களில் உள்ள காம்பவுண்டுகளில் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் வைரஸ் எதிர்ப்பு பண்புகள் இருப்பதன் காரணமாக அவை நமது நோய் எதிர்ப்பு அமைப்பை வலுவடையச் செய்து, தொற்றுகளுக்கு எதிராக பாதுகாப்பு அளிக்கிறது. மாதுளம் பழங்களில் கலோரிகள் குறைவாக இருப்பதால் உடல் எடையை கட்டுக்குள் வைக்க நினைப்பவர்களுக்கு இது ஒரு ஆரோக்கியமான தின்பண்டமாகவும் அமைகிறது.

மாதுளம்பழங்களை வாங்குவதற்கும், பயன்படுத்துவதற்கும் உதவும் சில குறிப்புகள் :

நல்ல பழுத்த, கனமாக உள்ள மாதுளம் பழங்களை தேர்வு செய்யவும். மேலும் மாதுளம் பழம் தோல் மிருதுவாகவும், எந்தவித அடையாளங்கள் இல்லாததுவாகவும் இருக்க வேண்டும்.

மாதுளம் பழங்கள் நீண்ட நாட்களுக்கு ஃபிரஷ்ஷாக இருப்பதற்கு அதனை குளிர்சாதன பெட்டியில் சேமிக்கலாம் அல்லது குளிர்ந்த, இடத்தில் வைக்கலாம்.

மாதுளம் பழத்தை உரிப்பது பலருக்கு கடினமான ஒரு வேலையாக அமைகிறது. ஆனால் அதனை உரிப்பது மிகவும் எளிது. முதலில் மாதுளம் பழத்தில் உள்ள மேற்பகுதியை வெட்டி, பக்கவாட்டில் கோடுகளை போடவும். பின்னர் அதனை தலைகீழாக கவிழ்த்து ஒரு கரண்டி வைத்து தட்டி அதில் உள்ள முத்துக்களை எளிதாக எடுக்கலாம்.

மாதுளம் பழ தேநீர்: உலர்ந்த மாதுளம் பழ தோலை பயன்படுத்தி ஆரோக்கியமான தேநீர் தயாரித்து பருகலாம்.

மாதுளம் பழ வினிகர்: மாதுளம் பழ தோல் மற்றும் விதைகளை பயன்படுத்தி சமையலுக்கு வினிகர் தயாரித்து உபயோகிக்கலாம்.

மாதுளம் பழத்தோல்: மாதுளம் பழத் தோலை உலர வைத்து பொடியாக அரைத்து உணவு மற்றும் பானங்களில் சேர்த்து சாப்பிடுவது நமக்கு ஊட்டச்சத்துக்களை வழங்கும்.

மாதுளம் பழங்களை தினமும் மிதமான அளவு சாப்பிடுவது நமக்கு அதிக நன்மைகளை அளிக்கும். ரத்த மெலிதல் சம்பந்தப்பட்ட மருந்துகளை எடுத்து வருபவர்கள் மாதுளம் பழம் சாப்பிடுவதற்கு முன்பு கட்டாயமாக மருத்துவரை அணுக வேண்டும். மாதுளம் பழங்களை சாப்பிட்ட ஒரு சில வாரங்களிலேயே அதன் மூலமாக கிடைக்கும் பலன்களை கண்கூடாக பார்க்கலாம். மாதுளம் பழம் நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல் மன நலனையும் பராமரிக்க உதவுகிறது.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *