இங்கி., டெஸ்டில் ஷமி பங்கேற்பதில் சந்தேகம்; சூரியகுமாருக்கு வெளிநாட்டில் அறுவை சிகிச்சை?

Mohammed Shami | Suryakumar Yadav: இந்திய மண்ணில் சுற்றுப்பயணம் செய்யவிருக்கும் இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாட உள்ளது. இதில், இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி வருகிற 25ம் தேதி முதல் ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தில் தொடங்குகிறது.

இந்த டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி இந்த வாரத்தில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி கணுக்கால் காயத்திற்குப் பிறகு பந்துவீச்சை மீண்டும் தொடங்காததால், இங்கிலாந்துக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடமாட்டார் என்கிற தகவல் வெளியாகியுள்ளது.

இதேபோல், உலகின் நம்பர் 1 டி20 பேட்ஸ்மேனான இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ், குடலிறக்கத்தால் பாதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்பதால், அவர் சர்வதேச கிரிக்கெட்டுக்குத் திரும்புவதற்கு அதிக நேரம் ஆகலாம் என்றும், ஐ.பி.எல் தொடரில் அவர் முழு உடல் தகுதியுடன் இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுதொடர்பாக இந்திய கிரிக்கெட் வாரிய அதிகாரி ஒருவர் பேசுகையில், “ஷமி இன்னும் பந்து வீசத் தொடங்கவில்லை, அவர் என்.சி.ஏ-வுக்குச் சென்று தனது உடற்தகுதியை நிரூபிக்க வேண்டும். இங்கிலாந்துக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் அவர் விளையாடுவது சந்தேகமாக உள்ளது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *