தனிப்பட்ட காரணத்திற்காக தொடரிலிருந்து வெளியேறிய இங்கிலாந்து வீரர் ஹாரி ஃப்ரூக்!

இங்கிலாந்து அணியானது, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வரும் 25ஆம் தேதி ஹைதராபாத்தில் நடக்க இருக்கிறது. இதற்காக இந்திய அணி வீரர்கள் ஹைதராபாத் சென்று தங்களது பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் தான் இங்கிலாந்து அணியின் ஆல் ரவுண்டரான ஹாரி ஃப்ரூக் டெஸ்ட் தொடரிலிருந்து விலகியுள்ளார். இதுவரையில் 12 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய ஃப்ரூக் 1,181 ரன்கள் குவித்துள்ளார். இதில், 4 சதங்களும், 7 அரைசதங்களும் அடித்துள்ளார். அதிகபட்சமாக 186 ரன்கள் அடித்துள்ளார். ஹாரி ப்ரூக்கிற்கு பதிலாக மாற்று வீரர் குறித்து இன்னும் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா:

ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல் (விக்கெட் கீப்பர்), கேஎஸ் பரத் (விக்கெட் கீப்பர்), துருவ் ஜூரெல் (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்‌ஷர் படேல், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், முகேஷ் குமார், ஜஸ்ப்ரித் பும்ரா (துணை கேப்டன்), ஆவேஷ் கான்.

இங்கிலாந்து:

பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ரேஹான் அகமது, ஜேம்ஸ் ஆண்டர்சன், கஸ் அட்கின்ஸன், ஜானி பேர்ஸ்டோவ் (விக்கெட் கீப்பர்), சோயில் பஷீர், ஹாரி ப்ரூக், ஜாக் கிராவ்லி, பென் டக்கெட், பென் ஃபோகஸ், டாம் ஹார்ட்லி, ஜாக் லீச், ஆலி போப், ஜோ ரூட், மார்க் வுட்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *