விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்ட இங்கிலாந்து வீரர் – 2 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்த நிலை!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது நடந்து வருகிறது. இதில், நடந்து முடிந்த 2 போட்டிகளில் முறையே 1-1 என்று இரு அணிகளும் வெற்றி பெற்று சமனில் உள்ளன. இதையடுத்து 3 ஆவது டெஸ்ட் போட்டி வரும் 15ஆம் தேதி ராஜ்கோட்டி நடைபெற உள்ளது.

இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு பிறகு ஓய்விற்காக இங்கிலாந்து வீரர்கள் அபுதாபிக்கு சென்று குடும்பத்தினருடன் சேரத்தை செலவிட்டனர். இதைத் தொடர்ந்து 3ஆவது போட்டிக்காக நேற்று முன் தினம் அபுதாபியிலிருந்து ராஜ்கோட்டிற்கு புறப்பட்டனர். ஆனால், ராஜ்கோட் விமான நிலையத்தாஇ அடைந்த உடன் இங்கிலாந்து அணியின் ரெஹான் அகமது விசா பிரச்சனையால் தடுத்து நிறுத்தப்பட்டார்.

ரெஹான் அகமது பாகிஸ்தானை பூர்வீகமாக கொண்டவர் என்பதால், அவருக்கு ஒரு முறை மட்டுமே விசா வழங்கப்பட்டுள்ளது. 2ஆவது டெஸ்ட் போட்டிக்கு பிறகு அவர் இந்தியாவை வெளியேறி அபுதாபி புறப்பட்டுச் சென்றார். ஆதலால், அவர் மீண்டும் இந்தியாவிற்குள் வருவதற்கு விசா பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து அவருக்கு 2 நாட்கள் எமர்ஜென்சி விசா வழங்கிய விமான நிலைய அதிகாரிகள் ராஜ்கோட்டிற்குள் அனுமதித்துள்ளனர். இதனை ஏற்றுக் கொண்ட இந்திய அணி நிர்வாகம் ரெஹ்மான் அகமதுவின் விசா பிரச்சனையை 24 மணி நேரத்திற்குள் தீர்ப்பதாக தெரிவித்துள்ளது. இச்சம்பவத்தால் 2 மணி நேரத்திற்ம் மேலாக இங்கிலாந்து வீரர்கள் விமான நிலையத்திலேயே இருந்துள்ளனர்.

இதற்கு முன்னதாக முதல் போட்டியில் விளையாட வேண்டிய சோயில் பஷீர் விசா பிரச்சனை காரணமாக 3 நாட்கள் தாமதாம இந்தியா வந்தார். இதையடுத்து அவர் 2ஆவது டெஸ்ட் போட்டியில் அறிமுகம் செய்யப்பட்டார்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *