குடைமிளகாய் போதும்; சப்பாத்திக்கு சுவையான கிரேவி ரெடி: இப்படி செய்து பாருங்க

சுவையான குடைமிளகாய்  சன்னா மசாலா செய்வது குறித்து இங்கு பார்ப்போம். சப்பாத்தி, தோசைக்கு வைத்து சாப்பிட நன்றாக இருக்கும்.

தேவையான பொருட்கள் 

ஊற வைத்த வெள்ளை சுண்டல் – 1 கப்

குடைமிளகாய் – 1

வெங்காயம் – 1

தக்காளி – 1

இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன்

மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன்

மஞ்சள் – 1/4 டீஸ்பூன்

கரம் மசாலா தூள் – 1/4 டீஸ்பூன்

பிரிஞ்சி இலை – 1

கசூரி மேத்தி – 1/4 டீஸ்பூன்

சாட் மசாலா – 2 டீஸ்பூன்

எண்ணெய் – 3 டீஸ்பூன்

உப்பு – தேவையாள அளவு

முதலில் கொண்டை கடலையில் உப்பு கொஞ்சமாக சேர்த்து குக்கரில் 5 விசில் வரை விட்டு வேக வைத்து எடுத்துக் கொள்ளுங்கள். அதற்குள் காய்கறிகளை நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

இப்போது கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி பட்டை, பிரிஞ்சு இலை சேர்க்கவும். பின் வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும். பச்சை வாசனை போனதும் தக்காளி சேர்த்து வதக்கவும். அடுத்து

நறுக்கிய குடை மிளகாய் சேர்க்கவும். இவை அனைத்தும் வதங்கியதும் மசாலா பொடிகள் அனைத்தையும் சேர்த்து வதக்கி கொள்ளவும். பின் 1 கப் தண்ணீர் சேர்த்து 5 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும். பின் வேக வைத்த சுண்டலை தண்ணீருடன் சேர்த்து கொதிக்க விடவும். ஏற்கெனவே சுண்டலில் உப்பு சேர்த்தோம் என்பதால் உப்பு பார்த்து சேர்க்கவும். கிரேவி நன்கு கொதித்து வரும் வேளையில் கசூரி மேத்தி சேர்த்து கலந்து இறக்கி விடுங்கள். அவ்வளவுதான் சுவையான குடைமிளகாய் சன்னா மசாலா ரெடி.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *