ஈரோடு, திண்டுக்கல், சென்னையில் “தலை சுத்தவிட்ட” சின்ன வெங்காயம்.. அடுத்து பூண்டு.. விவசாயிகள் ஹேப்பி
சென்னை: வழக்கமாக வெங்காயம்தான் பொதுமக்களுக்கு அதிர்ச்சியை தரும்.. இப்போது, இந்த லிஸ்ட்டில் பூண்டும் சேர்ந்துள்ளது, இல்லத்தரசிகள் கதிகலங்கி போயிருக்கிறார்கள்.
தமிழகத்தை பொறுத்தவரை பருவமழை காரணமாக, காய்கறிகளின் விளைச்சலிலும் மாற்றம் தென்பட்டது.. வடகிழக்கு பருவமழையின் மாற்றங்களால் வெங்காயத்தின் விளைச்சல் வெகுவாக குறைய ஆரம்பித்தது.
சின்ன வெங்காயம்: இதன்காரணமாக, ஒரு கிலோ வெங்காயம் 150 முதல் 200 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. இதனால் நடுத்தர மற்றும் ஏழை மக்கள் அளவுக்கு அதிகமாகவே பாதிக்கப்பட்டனர். இந்த நிலைக்கு வெளிநாடுகளுக்கான வெங்காய ஏற்றுமதிக்கு, தற்சமயம் தடை விதித்திருக்கிறது மத்திய அரச.. இதனால் வெங்காய விலையில் மாற்றம் தென்பட துவங்கியது.
போதாக்குறைக்கு காலநிலையின் சூழலும், வெங்காய வளர்ச்சிக்கு வசதியாக அமைந்தது.. இதனால், வெங்காயவரத்து அதிகரித்தது.. ஒரு கிலோ வெங்காயம் 45 முதல் 70 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. ஆனால், 4 நாட்களுக்கு முன்பு கோயம்பேடு சந்தைகளில் கிலோ ரூ.30க்கு விற்கப்பட்ட சின்ன வெங்காயத்தின் விலை, ரூ.10ஆக திடீரென குறைந்துவிட்டது. இதனால் விவசாயிகள் கடும் அதிர்ச்சிக்கும் வேதனைக்கும் ஆளானார்கள். ஆனால், பொதுமக்கள் குஷியானார்கள்.
குஷியில் வியாபாரிகள்: இப்போது, பூண்டு விலையை கேள்விப்பட்டு, பொதுமக்கள் அதிர்ந்துபோயிருக்கிறார்கள்.. வியாபாரிகள் குஷியில் உள்ளனர்.. காரணம், சென்னையில் வரலாறு காணாத அளவுக்கு ஒரு கிலோ பூண்டு ரூ.450 வரை விற்பனை செய்யப்படுகிறதாம்.. நீலகிரி, கொடைக்கானல், திண்டுக்கல், ஈரோடு போன்ற மாவட்டங்களில்ல்தான் ஒட்டுமொத்த தமிழகத்துக்கும் பூண்டு உற்பத்தி அதிகமாக செய்யப்படுகிறது. இதைதவிர, வெளிமாநிலங்களிலிருந்தும் நமக்கு பூண்டு இறக்குமதியாகிறது.
தற்போது, பூண்டு அறுவடைக் காலம் தொடங்கிவிட்ட நிலையிலும், வழக்கத்துக்கு மாறாக, சென்னை கோயம்பேடு சந்தைக்குப் பூண்டு வரத்து குறைந்துவிட்டதாம்.