உக்ரைன் ராணுவ தளபதிக்கும் ஜனாதிபதிக்கும் இடையே வெடித்த மோதல்: வெளிவரும் பின்னணி

உக்ரைனில் இரும்பு தளபதி என கொண்டாடப்படுபவருக்கும் ஜனாதிபதி ஜெலென்சிக்கும் இடையே மோதல் வெடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜனாதிபதியின் உத்தரவு
தளபதி Valerii Zaluzhnyi-ஐ பதவி விலக வலியுறுத்தி ஜனாதிபதியின் உத்தரவு மறுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அத்துடன், தரைப்படை தளபதியை அந்த பொறுப்புக்கு ஜெலென்ஸ்கி தெரிவு செய்துள்ளதாகவும், ஆனால் அந்த வாய்ப்பை அவர் மிராகரித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

சமீப நாட்களில் ரஷ்யாவின் கடுமையானத் தாக்குதலுக்கு உக்ரைன் தடுமாறி வருகிறது. மட்டுமின்றி, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கோடைகால எதிர்த்தாக்குதல் தெற்கு மற்றும் கிழக்கில் சிறிது முன்னேற்றம் மட்டுமே கண்டுள்ளது.

ரஷ்யப் படைகள் 1,000 கிலோமீட்டர் தூரத்தில் சிறிய ஆனால் பலத்த சேதத்தை ஏற்படுத்தின. மேலும், மேற்கத்திய இராணுவம் மற்றும் நிதி உதவி கிடைப்பது என்பது நாளுக்கு நாள் கடினமாக மாறி வருகிறது.

ரஷ்யாவுக்கு எதிரான போரை Valerii Zaluzhnyi மட்டுமே முன்னெடுத்து நடத்தவில்லை. இருப்பினும், அவரை பொறுப்பில் இருந்து நீக்கி, புதிய ஒரு தளபதியை நியமிப்பதன் மூலமாக, ராணுவத்தினிடையே புது உத்வேகம் காணப்படலாம் என்று உக்ரைன் நம்புகிறது.

போர் ஸ்தம்பித்த நிலையில்
உக்ரைன் போர் நீடித்து வருவதுடன் தளபதி Zaluzhnyi புகழும் அதிகரித்து வருகிறது. கடவுளும் தளபதி Zaluzhnyiயும் தங்களுடன் இருக்கிறார்கள் என உக்ரைன் மக்கள் பெருமையுடன் தங்கள் தெருக்களில் பதிவு செய்துள்ளனர்.

இந்த நிலையிலேயே தளபதி Valerii Zaluzhnyi-ஐ இந்த வாரம் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி ஜனாதிபதி ஜெலென்ஸ்கி உத்தரவு பிறப்பித்துள்ளார். இருப்பினும் 92 சதவிகித உக்ரைன் மக்களின் ஆதரவு Zaluzhnyi-க்கு இருப்பதாக கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.

போர் வெற்றி மற்றும் உக்ரைன் நாட்டின் எதிர்காலம் தொடர்பில் மிகுந்த நம்பிக்கையுடன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி பேசி வரும் நிலையில், போர் ஸ்தம்பித்த நிலையில் இருப்பதாக கடந்த நவம்பர் மாதம் Zaluzhnyi வெளிப்படையாக பேசி இருந்தார்.

அப்போதே ஜனாதிபதிக்கும் தளபதி Zaluzhnyi-க்கும் மோதல் வெடித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையிலேயே ஜனாதிபதியின் கோரிக்கையை ஏற்க அவர் அதற்கு மறுத்துள்ளதாக கூறப்படுகிறது. தற்போது தளபதி Valerii Zaluzhnyi-ன் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளதாக கூறப்படுகிறது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *