திருந்தாத ஜென்மம்! கேப் டவுன் சென்றும் Fraud செய்த மும்பையின் பொலார்ட்.. கடுப்பான சிஎஸ்கே சிங்கம்
அந்த வகையில் தற்போது ஐபிஎல் அணிகள் போட்ட குட்டி தற்போது தென்னாப்பிரிக்கா, அமெரிக்கா என பல்வேறு இடங்களில் நன்றாக வளர்ந்து வருகிறது.
இதில் SA 20 என்று ஐபிஎல் பாணியில் நடைபெற்று வரும் கிரிக்கெட் தொடரில் சிஎஸ்கே வின் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியின் எம் ஐ கேப் டவுன் அணியும் நேற்று முக்கியமான ஆட்டம் ஒன்றில் பல பரிட்சை நடத்தியது.
இந்த போட்டியில் இரு அணிகளும் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருந்தார்கள். இந்த நிலையில் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டதால் ஓவர்கள் குறைக்கப்பட்டது எம் ஐ கேப் டவுன் அணி எட்டு ஓவர் முடிவில் 80 ரன்கள் எடுத்திருந்தது. இதனை எடுத்து சூப்பர் கிங்ஸ் அணிக்கு வெற்றி இலக்கு 98 ரன்கள் ஆக மாற்றி அமைக்கப்பட்டது. அப்போது மீண்டும் மழை பெய்ய தொடங்கியது.
இதனால் சிஎஸ்கே வீரர்கள் அதிரடியாக விளையாடத் தொடங்கினார்கள். ஆட்டம் எட்டு ஓவராக குறைக்கப்பட்டால் குறைந்தபட்சம் ஐந்து ஓவராவது சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங் பிடித்திருக்க வேண்டும் அப்போதுதான் டக்வொர்த் லூயிஸ் விதி அமலுக்கு வரும். மழை வேறு பெய்யத் தொடங்கியதால் டுபிளசிஸ், டிபிலாயும் அபாரமாக விளையாடி ரன்களை சேர்த்தார்கள்.
ஒரு கட்டத்திற்கு மேல் இவர்களை கட்டுப்படுத்த முடியாது என்பதை புரிந்து கொண்ட எம் ஐ கேப்டவுன் அணியின் பொலார்ட் தனக்கு கைவந்த வேலையை செய்ய தொடங்கினார். அதாவது பந்து வீச அதிக நேரம் எடுத்துக் கொண்டது, ஃபீல்டிங் செட் செய்ய நேரத்தை கடத்துவது போன்ற பல ஏமாற்று யுக்திகளை போல செய்யத் தொடங்கினார்.