செல்போன் அழைப்பைக் கூட எடுப்பதில்லையாம்.. இஷான் கிஷானை விமர்சித்த முன்னாள் இந்திய வீரர்!
அதன் பின்னர் தற்போது நடந்து வரும் ரஞ்சி கோப்பை தொடரிலும் விளையாடவில்லை.
இஷான் கிஷான் மீண்டும் அணியில் இணைவது சம்மந்தமாக பேசிய பயிற்சியாளர் டிராவிட், “இஷான் மீண்டும் அணிக்கு திரும்ப வேண்டுமென்றால், அவர் உள்ளூர் போட்டிகளில் விளையாட வேண்டும். அப்போதுதான் அவர் பரிசீலனைக்கு உட்படுத்தப்படுவார்” எனக் கூறியிருந்தார். இதன் மூலம் இப்போதைக்கு இஷான் கிஷான் மேல் தேர்வுக்குழுவினரின் பார்வை இல்லை என்பது உறுதியாகியுள்ளது.
இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரும் வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ரா இஷான் கிஷான் விவகாரம் குறித்து பேசியுள்ளார். அதில் “இந்திய அணிக்கு தேர்வு செய்யப் படுவதற்கு முன்பு அவர் சில போட்டிகளிலாவது வென்றிருக்க வேண்டும்.
ஜூன் அல்லது ஜுலை மாதத்தில் ஓய்வென்றால் கூட பரவாயில்லை, ஆனால் இப்போது ரஞ்சி தொடர் நடக்கும் போது அவர் ஓய்வெடுப்பது சரியாக இருக்காது. அப்போதுதான் அவர் தான் இந்திய அணிக்கு தயாராக இருக்கிறேன் என உணர்த்த முடியும். அவர் செல்போன் அழைப்பைக் கூட எடுக்கவில்லை என்று சொல்லப்படுகிறது” எனக் கூறியுள்ளார்.