வருமானம் இல்லாவிட்டாலும் மனைவிக்கு ஜீவனாம்சம் வழங்குவது கணவரின் கடமை: அலகாபாத் உயர்நீதிமன்றம்

க்னோ:உத்தரபிரதேசத்தை சேர்ந்த ஒரு ஜோடி கடந்த 2015-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். ஆனால், கடந்த 2016-ம் ஆண்டு கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு மனைவி காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

 

மேலும் அவர் தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார்.இந்த வழக்கை விசாரித்த குடும்ப நல நீதிமன்றம், மனைவிக்கு ஜீவனாம்சமாக மாதம் ரூ. 2,000 வழங்குமாறு உத்தரவிட்டனர்.

இந்த உத்தரவை எதிர்த்து, கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் லக்னோ கிளையில் கணவர் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.இந்த மனு நீதிபதி ரேணு அகர்வால் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, “என் மனைவி டிகிரி முடித்துள்ளார்.மாதம் ரூ.10 ஆயிரம் சம்பாதிக்கிறார்.கூலி வேலை செய்து வந்த நான், தற்போது உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்று வருகிறேன்.நான் வாடகை வீட்டில் வசிக்கிறேன், என் பெற்றோரை கவனித்துக் கொள்ள வேண்டும்.

அதனால் மாதம் ரூ.2 ஆயிரம் கொடுக்க முடியாது” என்றார் கணவர்.இதைக் கேட்ட நீதிபதி, கணவரின் மனுவை நிராகரித்தார்.

மேலும் அவர் தனது உத்தரவில், “மனைவி சம்பாதிக்கிறார் என்பதற்கான ஆதாரத்தை கணவர் சமர்ப்பிக்கவில்லை.ஒரு ஆரோக்கியமான கணவருக்கு உடல் உழைப்பு மூலம் பணம் சம்பாதிக்கும் திறன் உள்ளது.

எனவே, வருமானம் இல்லாவிட்டாலும் மனைவிக்கு ஜீவனாம்சம் வழங்குவது அவரது கடமை.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *