இந்த காய் இருந்தால்போதும்: இப்படி பஞ்சாமிர்தம் செய்யுங்க: செம்ம சுவையா இருக்கும்
செம்ம சுவையான கத்திரிக்காய் பஞ்சாமிர்தம், இப்படி செய்து பாருங்க.
தேவையான
பச்சை கத்தியாக்கய் நீளமானது 1
2 ஸ்பூன் நெய்
சிறய அளவு தண்ணீர்
அரை கப் வெல்லம்
சின்ன துண்ட் பச்சை கர்ப்பூரம்
2 ஏலக்காய்
1 ஸ்பூன் சர்க்கரை
செய்முறை: கத்திரிக்காய்யை நன்றாக கழுவி சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். பாத்திரத்தில் 2 ஸ்பூன் நெய் சேர்த்து கத்திரிக்காய்யை வதக்கவும். நன்றாக வேக விட வேண்டும். இனியொரு பாத்திரத்தில் வெல்லம், தண்ணீர் சேர்த்து கரைத்துகொள்ளவும். நன்றாக பாகு காய்ச்சவும். இதை கத்தரிக்காய்யில் சேர்த்து கிளரவும். நன்றாக கிளர வேண்டும். இது பஞ்சாமிரதம் பதத்திற்கு வரும்போது, அதில் ஏலக்காய், கர்ப்பூரம், சர்க்கரை இடித்ததை சேர்க்கவும். சுவையான கத்திரிக்காய் பஞ்சாமிர்தம் ரெடி.