கூட ஆள் போயிட்டு இருக்கும்போதே இப்படியா! வீடியோவை பார்த்த பசங்க எல்லாரும் ஒரு நிமிஷம் கெறங்கி போயிட்டாங்க!
“இணையத்துல இந்த பொண்ணுங்க என்ன வீடியோ போட்டாலும் வைரலாயிடுதுப்பா” என ஆண்களை புலம்பச் செய்திருக்கின்றார் பீஹாரைச் சேர்ந்த ஓர் இளம் பெண். இவர் சமீபத்தில் இருசக்கர வாகனத்தை பயன்படுத்தி வெளியிட்ட வீடியோ ஒன்று மிகப் பெரிய அளவில் ரீச்சை இணையத்தில் பெற்றிருக்கின்றது. அப்படி என்ன அவர் செய்தார் என்பது பற்றிய தகவலை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.
பொதுவாக வாகனம் சார்ந்து என்ன செயலை செய்தாலும் அதனை விதிமீறலாக எடுத்துக் கொள்ளும் காவல்துறை அதற்குரிய தண்டனையை உடனடியாக உரிய நபர்களுக்கும் வழங்கிவிடும். ஆனால், இந்த சம்பவத்தில் காவலர்கள் சிலரே, இளம் பெண் செய்த செயலை ரசிக்க தொடங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
அப்படி என்ன செய்தார் என்று தானே கேட்கின்றீர்கள். அந்த இளம் பெண் இருசக்கர வாகனத்தில் பின் பக்கத்தில் அமர்ந்தபடி ரீல்ஸ் செய்திருக்கின்றார். ஃப்ளையிங் கிஸ் கொடுப்பதைப் போன்ற ரீல்ஸையே எடுத்து அவர் இணையத்தில் பதிவிட்டு இருக்கின்றார். இந்த ரீல்ஸ் வீடியோவே தற்போது இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கின்றது.
இளம் பெண்ணின் இந்த செயலுக்கு இணைய வாசிகள் மத்தியில் வரவேற்பு மற்றும் எதிர்ப்பு என இரண்டும் ஒரு சேர கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இளம் பெண்ணின் க்யூட்டான செய்கையை ரசித்த இளைஞர்கள் அதை லைக் செய்து, பின்னர் கமெண்டாக ஹார்ட்-இன் சிம்பளை பதிவிட்டு இருக்கின்றனர்.
அதேநேரத்தில், மற்றொரு பக்கம் வேறு சிலர் நெட்டிசன்கள் இளம் பெண் செய்த தவறை சுட்டிக்காட்டி அவருக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் என காட்டமாக தெரிவித்து வருகின்றனர். ஆமாங்க, இந்த இளம் பெண் செய்தது க்யூட்டாக இருந்தாலும், அவர் தலைக் கவசம் அணியவில்லை.