Evening Snacks: எடை குறைப்பு முதல் சர்க்கரை நோய் பாதிப்பு வரை..! மழை காலத்தில் ஒரு கை அளவு பிஸ்தா தரும் நன்மைகள் இதோ

சாப்பிடுவதற்கு இடையே எந்த வகை ஸ்நாக்ஸ்களையும் கூச்சப்படாமல் சாப்பிட்டு, பின் அதிக கலோரிகள் சாப்பிட்டோம் என்று வருந்தப்படுபவரா இருந்தால், உங்களுக்கான சிறந்த ஸ்நாக்ஸ் உணவாக பிஸ்தா உள்ளது. இது உங்களை வயிறையும், மனதையும் நிறைவாக வைத்திருப்பது மட்டுமில்லாமல், மழை, குளிர் காலங்களில் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் உணவாக உள்ளது.
ஒரு கையளவு பிஸ்தா சாப்பிடுவது உடலுக்கு தேவையான அளவு புரதத்தை எடுத்துக்கொள்வதாக கருதலாம் என்று கூறப்படுகிறது. இதில் குறைவான க்ளைசெமிக் குறியீடு இருப்பதால், நீண்ட நேரம் பசி உணர்வை ஏற்படடுத்துவதில்லை. ரத்த சர்க்கரை அளவை சீராக வைத்திருக்க உதவுகிறது. நீண்ட நேரம் வயிறு நிறைவாக இருக்கும் உணர்வை தருவதால் எடை குறைப்புக்கும் வழி வகுக்கிறது.
பிஸ்தா ஏன் சாப்பிட வேண்டும், எப்படி சாப்பிட வேண்டும் என்பது குறித்து பிரபல ஊட்டச்சத்து நிபுணர்கள் பகிர்ந்திருக்கும் தகவல்களை பார்க்கலாம்
பிஸ்தாக்களில் பி6 பைரிடோக்சின் அதிகம் இருப்பதால் மாதவிடாய் சுழற்சிக்கு முன்னர் ஏற்படும் வலி அல்லது சிக்கல்களுக்கு தீர்வாகவும், உடலிலுள்ள நீர் ஆதாரத்தை தக்க வைக்கவும் உதவுகிறது.
பிஸ்தாவில் எந்த விதமான கொலஸ்ட்ராலும் இல்லை. அதிகமாக நார்ச்சத்து இருப்பதால், குடலில் உள்ள பாக்டீரியாக்களுக்கு சிறந்ததாக உள்ளது.
வீகன் உணவு முறையில் பிரதான புரதம் நிறைந்த உணவாக சோயாபீன்ஸ், கினோவா வரிசையில் பிஸ்தா இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
உங்கள் உடல் தன்னிச்சயாக உருவாக்கி கொள்ளும் ஒன்பது வகை அமினோ அமிலங்களை பெறுவதற்கு ஆதரமாக திகழும் முழுமையான புரதங்கள் பிஸ்தாவில் நிரம்பியுள்ளது. சுமார் 20 மாறுபட்ட அமினோ அமிலங்கள் ஒன்றாக பிணைந்து புரதம் உருவாக காரணமாக உள்ளது.
இதில் 11 அமிலங்களை இயல்பாகவே உங்களது உடல் உருவாக்கிகொள்கிறது. மீதமுள்ள 9 அமிலங்களை ஈடுகட்ட பிஸ்தாவை சாப்பிட்டால் நல்ல பலன் பெறலாம்.