எல்லாரும் இறங்குங்க.. இதுக்கு மேல போகாது! கிளாம்பாக்கத்தில் அதிகாலையில் சம்பவம்.. அடுத்து நடந்த ஷாக்
சென்னை; சென்னை கிளாம்பாக்கத்தில் இன்று அதிகாலை ஆம்னி பேருந்து பயணிகள் இறக்கி விடப்பட்டது விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
சென்னைக்கு உள்ளே ஆம்னி பேருந்துகள் நேற்று மாலையில் இருந்து அனுமதிக்கப்படுவது இல்லை. அதேபோல் நேற்று மாலையில் இருந்து ஆம்னி பேருந்துகளை கோயம்பேட்டில் இருந்து இயக்க அனுமதிப்பது இல்லை. கிளாம்பாக்கத்தில் மட்டுமே பயணிகளை ஏற்ற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது. அதேபோல் காலையில் கோயம்பேடு உள்ளே வரும் பேருந்துகளை தடுத்து கிளாம்பாக்கத்தோடு நிறுத்தும் முடிவும் எடுக்கப்பட்டு உள்ளது.
ஈசிஆர் வழி செல்லும் பேருந்துகள் மட்டுமே.. கோயம்பேடு, சின்னமலை, ராஜிவ் காந்தி சாலை வழியாக ஈசிஆர் செல்ல அனுமதிக்கப்படுகின்றன. இவை மட்டுமே கோயம்பேடில் இருந்து இயங்க அனுமதிக்கப்படுகிறது. மற்றபடி செங்கல்ப்ட்டு, பெருங்களத்தூர் ரூட் எடுக்கும் வாகனங்கள் எல்லாம் கிளாம்பாக்கத்தில் நிறுத்தப்பட்டு அங்கிருந்து மட்டுமே பயணிகளை ஏற்றிக்கொள்ள, இறக்கிக்கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.
இறக்கி விடப்பட்டனர்: நேற்று மாலையில் இருந்து இந்த விதிமுறை அமலில் உள்ளது. இப்படிப்பட்ட நிலையில்தான் சென்னை கிளாம்பாக்கத்தில் இன்று அதிகாலை ஆம்னி பேருந்து பயணிகள் இறக்கி விடப்பட்டது விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஆம்னி பேருந்தில் ஏற்கனவே புக் செய்தவர்கள் பலர் சிட்டியின் உள்ளே வருவதற்கு டிராப் பாயிண்ட் புக் செய்து இருந்தனர். ஆனால் ஆம்னி பேருந்துகள் எல்லையிலேயே தடுத்து நிறுத்தப்பட்டன. இதனால் பேருந்து உள்ளே இருந்தவர்கள்.. இறக்கி விடப்பட்டனர்.
கிளாம்பாக்கத்தில் இருந்து மினி பேருந்துகள், நகர பேருந்துகள் 10 நிமிடத்திற்கு ஒரு முறை நகரத்தின் எல்லா பகுதிகளுக்கும் பேருந்துகள் செல்கின்றன. ரூ. 10ல் இருந்து சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு இங்கே பேருந்துகள் உள்ளன. அதிகாலையே இந்த பேருந்துகளில் பலரும் சிட்டி உள்ளே வந்தனர்.