‘இந்திரா காந்திக்கு என்ன நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும்’; கர்நாடக பா.ஜ.க மீது சதானந்த கவுடா தாக்கு

கர்நாடக பா.ஜ.க மீது மூத்த தலைவரால் மற்றொரு தாக்குதலில், பா.ஜ.க எம்.பி டி.வி சதானந்த கவுடா புதன்கிழமை மாநில பிரிவு ‘சர்வாதிகாரப் போக்கை’ தவிர்க்க அறிவுறுத்தினார் மற்றும் கட்சியின் எம்.எல்.ஏ பசங்கவுடா பாட்டீல் யத்னல் மற்றும் பிறருக்கு எதிராக ஒழுக்கமின்மைக்காக உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரினார்.

பா.ஜ.க நாடாளுமன்ற வாரிய உறுப்பினர் பி.எஸ் எடியூரப்பாவின் இரண்டாவது மகனும், கட்சியின் எம்.எல்.ஏ பி.ஒய் விஜயேந்திரா தலைமையில் உருவாக்கப்பட்ட புதிய மாநிலப் பிரிவை கர்நாடக முன்னாள் முதல்வர் சதானந்த கவுடா விமர்சித்துள்ளார். புதிய பிரிவு வலுவாக இல்லை என்று சதானந்த கவுடா சமீபத்தில் கூறியிருந்தார்.

சமீபத்தில் கர்நாடக பா.ஜ.க பிரிவின் கட்டுப்பாட்டை எடியூரப்பா கைப்பற்றிய நிலையில், புதனன்று சதானந்த கவுடா கூறிய கருத்துக்கள் எடியூரப்பாவுக்கு எதிரானதாகவே பார்க்கப்படுகிறது.

செய்தியாளர் சந்திப்பில் பேசிய சதானந்த கவுடா, “கட்சிக்குள் சர்வாதிகார மனோபாவம் ஊடுருவியுள்ளது. இந்திரா காந்தி போன்ற சர்வாதிகாரிக்கு என்ன நடந்தது, அது எப்படி காங்கிரஸின் வீழ்ச்சியை ஏற்படுத்தியது என்பதை நாம் அறிவோம். எனவே, இந்த சர்வாதிகாரப் போக்கில் இருந்து விடுபட்டு, அனைவருடனும் கலந்தாலோசித்து முடிவுகளை எடுக்க வேண்டும்,” என்று கூறினார்.

பா.ஜ.க,வின் முக்கிய குழு கூட்டத்தில், இந்த பிரச்னையை எழுப்புவேன் என, முன்னாள் மத்திய அமைச்சர் சதானந்த கவுடா தெரிவித்தார். கட்சி உயர்மட்ட தலைவர்கள் மாநிலத்திற்கு வருகை தந்து அனைத்து தலைவர்களும் தங்கள் கருத்துக்களை தெரிவிக்க ஒரு மன்றத்தை வழங்க வேண்டும், என்றும் அவர் கூறினார்.

பசங்கவுடா பாட்டீல் யத்னல் போன்ற மாநிலத் தலைவர்களிடையே ஒழுக்கமின்மையை அனுமதிப்பது கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று சதானந்த கவுடா கூறினார். “நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் இது போன்ற ஒழுக்கமின்மை மட்டுமே வளரும்,” என்றும் அவர் கூறினார்.

கடந்த சில மாதங்களாக எடியூரப்பாவை பசங்கவுடா பாட்டீல் யத்னல் தாக்கி வருகிறார். செவ்வாய்க்கிழமை, பா.ஜ.க ஆட்சியின் கீழ் கொரோனா வைரஸ் தொற்றுநோய் தொடர்பான கொள்முதலில் ரூ.40,000 கோடி அளவுக்கு முறைகேடுகள் நடந்ததாக அவர் குற்றம் சாட்டினார்.

பா.ஜ.க தலைவர் என்ற முறையில், பசங்கவுடா பாட்டீல் யத்னலை சதானந்த கவுடா கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்தார், ஆனால் அவரை மீண்டும் சேர்க்குமாறு எடியூரப்பா வலியுறுத்தினார்.

“இதன் காரணமாகவே இன்று இந்த நிலையை எதிர்கொள்கிறோம்,” என்று மீண்டும் மீண்டும் எம்.எல்.ஏ பசங்கவுடா பாட்டீல் யத்னல் மாநில பா.ஜ.க.,வை சங்கடப்படுத்திய நிகழ்வுகளைப் பற்றி சதானந்த கவுடா கூறினார்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *