’நமோ’ செயலி மூலம் நன்கொடை அளிக்க அனைவரும் முன்வர வேண்டும் : பிரதமர் மோடி..!

மக்களவைத் தோ்தலுக்கு விரைவில் நடைபெற உள்ள நிலையில் மத்திய அரசின் செயல்பாடு, உள்ளூா் எம்.பி.யின் செயல்பாடு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் மக்களின் மனநிலையை அறிய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இது தொடா்பாக பிரதமா் நரேந்திர மோடியின் ‘நமோ’ செயலி மூலம் புதிய ஆய்வு ஜனவரியில் தொடங்கப்பட்டது.

‘ஜன் மன் சா்வே’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ஆய்வின் மூலம் மத்திய அரசு நிா்வாகம், தலைமை, மத்திய அரசு நிலையிலான வளா்ச்சி, நமோ செயலியைப் பயன்படுத்துவோரின் தொகுதி நிலவரம் உள்ளிட்டவை தொடா்பாக மக்களிடம் பல்வேறு கேள்விகள் முன்வைக்கப்பட்டு ஆய்வு நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், பிரதமரின் ‘நமோ’ செயலி வாயிலாக பாஜகவுக்கு பிரதமர் மோடி நன்கொடை வழங்கியுள்ளார். இது குறித்து தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் கூறியிருப்பதாவது, பாஜகவுக்கு நன்கொடை வழங்குவதிலும், வளர்ச்சியடைந்த பாரதத்தை கட்டியெழுப்புவதற்கான நம் முயற்சியை வலுப்படுத்துவதற்காகவும் மகிழ்ச்சியடைகிறேன். ’நமோ’ செயலி மூலம் ‘தேசத்தை கட்டமைப்பதற்கான நன்கொடையில்’ ஒவ்வொருவரும் பங்காற்றிடுமாறு அனைவரையும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *