சென்னை பிஎம்டபிள்யூ ஃபேக்ட்ரியில் எல்லாம் ரெடி!! பணக்காரர்கள் புக் பண்ணி குவிக்க போகும் கார்… விலை இவ்வளவுதா

பிஎம்டபிள்யூ (BMW) நிறுவனம் அதன் 620டி எம் ஸ்போர்ட் சிக்னெச்சர் (620d M Sport Signature) காரை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இந்தியாவில் இந்த புதிய பிஎம்டபிள்யூ காரின் விலை என்ன? இந்த காரின் சிறப்பம்சங்கள் என்னென்ன? வாருங்கள் அவற்றை பற்றி விரிவாக இனி பார்ப்போம்.

இந்தியாவில் சொகுசு கார்கள் விற்பனையில் முன்னணியில் இருக்கும் நிறுவனங்களுள் ஒன்று பிஎம்டபிள்யூ ஆகும். இந்த நிலையை தக்க வைத்து கொள்வதற்காக, அவ்வப்போது புது, புது கார்களை தொடர்ச்சியாக பிஎம்டபிள்யூ நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்து வருகிறது. இந்த வகையில், தற்போது இந்திய மார்க்கெட்டில் புதியதாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ள பிஎம்டபிள்யூ கார், 620டி எம் ஸ்போர்ட் சிக்னெச்சர் ஆகும்.

இந்த புதிய காரின் எக்ஸ்-ஷோரூம் விலையை ரூ.78.90 லட்சமாக பிஎம்டபிள்யூ நிறுவனம் நிர்ணயித்துள்ளது. காருக்கான முன்பதிவுகள் பிஎம்டபிள்யூவின் டீலர்ஷிப் மையங்களில் அதிகாரப்பூர்வமாக துவங்கப்பட்டுள்ளன. புதிய 620டி எம் ஸ்போர்ட் சிக்னெச்சர் காரை இந்தியாவில் நம் சென்னையில் உள்ள தொழிற்சாலையில் உற்பத்தி செய்ய பிஎம்டபிள்யூ நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இந்த காரின் பெயரில் உள்ள ‘டி’ என்பது டீசல் என்ஜினை குறிக்கிறது. அதாவது, டீசல் என்ஜின் உடன் மட்டுமே இந்த புதிய பிஎம்டபிள்யூ கார் கிடைக்கும். மினரல் வெள்ளை, டான்சானைட் நீலம், ஸ்கைஸ்க்ராப்பர் கிரே மற்றும் கார்பன் கிரே என மொத்தம் 4 விதமான பெயிண்ட் ஆப்ஷன்களில் புதிய 620டி எம் ஸ்போர்ட் சிக்னெச்சர் கார் கிடைக்கும்.

நேச்சுரல் லெதர் ‘டகோடா’ காக்னக்கில் இந்த காரின் உட்பக்க கேபின் அலங்கரிக்கப்பட்டு உள்ளது. காருக்குள் தையல்களும், குழாய் பகுதிகளும் வெள்ளை & கருப்பு நிறங்கள் கலந்த கலவையாக உள்ளன. காரின் முன்பக்கத்தில் எல்இடி ஹெட்லைட்கள் நேர்த்தியாக, வளைத்து வழங்கப்பட்டுள்ளன. காரின் க்ரில் பகுதிகள் பிஎம்டபிள்யூ கார்களுக்கே உண்டான ‘கிட்னி’ வடிவில் உள்ளன.

காரின் ஹெட்லைட் சிஸ்டத்தில் லேசர் லைட் என்கிற அற்புதமான ஒரு மாடர்ன் தொழிற்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. அதிகப்பட்சமாக சுமார் 650 மீட்டர்கள் தொலைவிற்கு ஒளியை வீசக்கூடிய இந்த லேசர் லைட்கள் தேவைக்கேற்ப செயல்படும். காரின் மேற்கூரை கொஞ்சம் சாய்வாக வழங்கப்பட்டுள்ளது. காரின் பின்பக்கத்தில், விண்ட்ஷீல்டு நன்கு அகலமாக உள்ளது. பின்பக்கத்தில் எல்இடி லைட்களின் டிசைன் கவர்ச்சிக்கரமானதாக உள்ளது.

காரின் பின்பக்கத்தில் இரட்டை எக்ஸாஸ்ட் குழாய்களில் க்ரோம் டச்சிங் உள்ளது. காருக்கு உள்ளே இருக்கைகள் அனைத்தும் எலக்ட்ரிக் அட்ஜெஸ்ட்மெண்ட், மெமரி ஃபங்க்சன் மற்றும் லம்பர் சப்போர்ட்டை வழங்கக்கூடியவைகளாக உள்ளன. ஸ்டேரிங் சக்கரத்திற்கு பின்னால் 12.3 இன்ச்சில் ஃபுல்லி-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் டிஸ்பிளே உள்ளது. மேற்கூரையில், 2-பேன் பனோராமிக் சன்ரூஃப் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த காரில் பொருத்தப்பட்டுள்ள 2 லிட்டர் 4-சிலிண்டர் டீசல் என்ஜின் அதிகப்பட்சமாக 140 கிலோ வாட்ஸ்/ 190 எச்பி மற்றும் 400 என்எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. பிஎம்டபிள்யூ ட்வின் பவர் டர்போ தொழிற்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த காரில் 0-இல் இருந்து 100kmph வேகத்தை வெறும் 7.9 வினாடிகளில் எட்டிவிடலாம்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *