“நான் முன்னாள் முதல்வர்தானே தவிர நிராகரிக்கப்பட்டவனல்ல!” – விமர்சனத்துக்கு சிவராஜ் சிங் சௌகான் பதில்
கடந்த ஆண்டு மத்தியப் பிரதேசத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைத்துக்கொண்டது.
அதைத் தொடர்ந்து, 4 முறை மத்தியப் பிரதேச முதல்வராக இருந்த சிவராஜ் சிங் சௌகானுக்கு பதிலாக, மோகன் யாதவ்-வை முதல்வராக அறிவித்தது பா.ஜ.க தலைமை. இதற்கிடையில், ‘சிவராஜ் சிங் சௌகானை பா.ஜ.க நிராகரித்திருக்கிறது’ என்ற விமர்சனங்கள் பரவலாகப் பேசப்பட்டது.
இந்த நிலையில், நேற்று, புனேவில் உள்ள MIT ஸ்கூல் ஆஃப் கவர்ன்மென்ட்டில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சௌகான்,“நான் இப்போது முன்னாள் முதல்வர் தானே தவிர, நிராகரிக்கப்பட்ட முதல்வர் அல்ல. நீண்ட காலம் பதவியில் இருப்பவர்களை மக்கள் தவறாகப் பயன்படுத்தத் தொடங்கும் போது, அந்த முதல்வர்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்வது வழக்கம். நான் முதல்வராக இருந்து விலகிய பின்னரும் கூட, நான் எங்குச் சென்றாலும் மக்கள் என்னை மாமா என அழைத்துக் கூக்குரலிடுகிறார்கள்.
மக்களின் அன்புதான் எனது உண்மையான பொக்கிஷம். நான் முதல்வர் பதவியிலிருந்து விலகியதால், தீவிர அரசியலை விட்டு விலகுவேன் என்பது அர்த்தமல்ல. நான் எந்த பதவிக்காகவும் அரசியல் செய்பவனல்ல. மக்களுக்குச் சேவை செய்வதற்காகவே அரசியலுக்கு வந்தவன். இதுவரை 11 தேர்தல்களில் வெற்றி பெற்றிருக்கிறேன். ஆனால் நான் எனக்காகத் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டதில்லை.
மோகன் யாதவ் – சிவராஜ் சிங் சௌகான்
வேட்புமனு தாக்கல் செய்வதற்கு ஒரு நாள் முன்னதாக தான் எனது தொகுதி கிராமங்களுக்குச் செல்வேன். கிராம மக்கள் என்னிடம் தேர்தலுக்கான நிதி மற்றும், தேர்தலில் எனக்கு உதவும் நபர்களுக்கான பட்டியலுடன் என்னைச் சந்திப்பார்கள். இதை நான் ஆணவத்தில் பேசவில்லை… நேர்மையாகத் தேர்தலில் போட்டியிட்டால், மக்கள் உங்கள் பக்கம்தான் இருப்பார்கள் என்பதை விளக்கினேன்.” எனப் பேசினார்.
மத்தியப் பிரதேச முதல்வராக மோகன் யாதவ் பதவியேற்ற சில நாள்களில்,“சில சமயங்களில் சிலருக்கு திடீரென ‘வன்வாஸ்’ (வெளியேற்றம்) கிடைக்கிறது, சிலருக்கு ‘ராஜ் திலகம்’ (முடிசூட்டு விழா) நடக்கிறது. ஆனால் உண்மையில் என்ன நடந்தாலும் அது ஒரு பெரிய நோக்கத்திற்காகவே நடைபெறுகிறது. ஆட்சியில் இருக்கும் போது, தாமரையில் இருக்கும் பாதத்தைப் போலக் கவனித்துக்கொள்கிறார்கள்.