கோவையில் பரபரப்பு… லட்சங்களில் சிக்கிய லஞ்சப்பணம்… சார் பதிவாளர் அலுவலகத்தில் விடிய விடிய சோதனை!

ஒரே நாளில் லஞ்சப்பணம் லட்சங்களில் சிக்கியிருப்பது கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டத்தில் நாகமாபுதூர் அருகே சார் பதிவாளர் அலுவலகத்தில் விடிய விடிய நடைபெற்ற லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் கணக்கில் வராத 1.40 லட்சம் ரூபாய் ரொக்கப்பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நாகமாபுதூர் பகுதியில் சார்பதிவாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்வதில் முறைகேடு நடப்பதாக தொடர்ந்து கோவை லஞ்ச ஒழிப்பு போலீஸாருக்கு புகார்கள் வந்துள்ளன. இதனையடுத்து அது குறித்து தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்த லஞ்ச ஒழிப்பு போலீஸார் நேற்று அதிரடியாக நுழைந்து சோதனையில் ஈடுபட்டனர்.

கோவை லஞ்ச ஒழிப்பு ஏ.டி.எஸ்.பி., திவ்யா தலைமையில் 6க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸார், அன்னூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் நுழைந்து அதிரடியாக சோதனை நடத்தினர். அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற பத்திரப்பதிவு மற்றும் அதற்கான கட்டணம் சரியாக உள்ளதா? லஞ்சம் பெறபட்டுள்ளதா? என பதிவாளர் அலுவலகத்தில் உள்ள ஊழியர்களிடம் லஞ்ச ஒழிப்பு போலீஸார் விசாரணை நடத்தினர். நேற்று இரவு 9 மணிக்கு துவங்கிய இந்த சோதனை இன்று காலை வரை நடைபெற்றது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *