Exclusive: 2024இன் முதல் ஸ்டார் தம்பதிகளாகும் ரகுல் ப்ரீத் சிங் – ஜாக்கி பக்னானி! திருமணம் எங்கு, எப்போது தெரியுமா?
தமிழில் த்ரிஷா நடித்த மோகினி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் ஜாக்கி பக்னானி. நடிகராக மட்டுமில்லாமல் தயாரிப்பாளராகவும் இவர் முத்திரை பதித்துள்ளார். தற்போது இவரும், நடிகை ரகுல் ப்ரீத் சிங்கும் இந்த ஆண்டின் முதல் நட்சத்திர தம்பதிகளாக மாறவுள்ளனர்.
2024 புத்தாண்டின் முதல் நாளிலேயே சினிமா ரசிகர்களை குஷிப்படுத்தும் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு, பாலிவுட் சினிமாக்களில் ஹீரோயினாக நடித்து வரும் ரகுல் ப்ரீத் சிங், பிரபல பாலிவுட் நடிகர் ஜாக்கி பக்னானி ஆகியோர் திருமணம் செய்து கொள்ளவுள்ளனர்.
இவர்களின் திருமணம் பிப்ரவரி 22ாம் தேதி கோவாவில் வைத்து நடைபெற இருக்கிறது. இதையடுத்து இந்த ஆண்டில் தம்பிதகளாக தங்களை முன்னிருத்திய முதல் ஜோடிகாளாக ரகுல் ப்ரீத் சிங் – ஜாக்கி பக்னானி ஜோடி மாறியுள்ளனர். தங்களது திருமணம் குறித்து இருவரும் மூச்சு விடாமல் இருந்து வந்ததோடு, முழுக்க குடும்பத்தினர், நண்பர்கள் மட்டும் பங்கேற்கும் நிகழ்வாக நடத்த திட்டமிட்டுள்ளனராம்.
ரகுல் ப்ரீத் சிங், ஜாக்கி பக்னானி என இருவரும் தங்களது தனிப்பட்ட வாழ்க்கை மீது மிகவும் அக்கறை கொண்டவர்ளாக இருந்து வருகிறார்கள். எனது இருவரும் தங்களின் திருமண நிகழ்வையும் தனிப்பட்ட முறையில் வைத்துக்கொள்ளவே விரும்புவதாக விவரமறிந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஜாக்கி பக்னானி தற்போது பேங்காக்கில் இருந்து வருவதுடன், நண்பர்களுடன் பேச்சிலர் பார்ட்டியை கொண்டாடி வருகிறாராம். அதேபோல் ரகுல் ப்ரீத் சிங்கும் பிரேக் எடுத்துக்கொண்டு தாய்லாந்தில் விடுமுறையை என்ஜாய் செய்து வருகிறார். அவ்வப்போது கவர்ச்சி படங்களையும் சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்து ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.
கடந்த அக்டோபர் 2021இல் ரகுல் ப்ரீத் சிங் – ஜாக்கி பக்னானி ஆகியோர் காதலித்து வருவதை இன்ஸ்டாவில் தெரிவித்தனர். அதன் பிறகு இருவரும் அவ்வப்போது ஜோடியாக இருக்கும் புகைப்படங்கள், விடியோக்களை தொடர்ந்து இன்ஸ்டாவில் பகிர்ந்து வந்தனர். கடந்த 2021 முதல் 2023 வரை இருவரும் டேட்டிங்கில் இருந்து வந்தனர்.
இதைத்தொடர்ந்து இருவரும் தம்பதிகளாக தயாராகிவிட்டனர். அதுவும் இவர்களின் திருமணம் குறித்த செய்தி 2024 புத்தாண்டு முதல் நாளில் தெரியவந்திருப்பது ரசிகர்களுக்கு ட்ரீட்டாக அமைந்துள்ளது.
ரகுல் ப்ரீத் சிங் தமிழில் உலக நாயகன் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். சிவகார்த்திகேயன் ஜோடியாக இவர் நடித்திருக்கும் அயலான் பொங்கல் வெளியீடாக திரைக்கு வரவுள்ளது. இந்தியிலும் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.
நடிகர், தயாரிப்பாளராக இருந்து வரும் ஜாக்கி பக்னானி, பால்டு, ராங்கரீஸ் போன்ற ஹிட் படங்களில் நடித்துள்ளார். அதேபோல் வெல்கம் டூ நியூயார்க், கூலி நம்பர் 1, பெல் பாட்டம் போன்ற படங்களையும் தயாரித்துள்ளார்.
ஜாக்கி பக்னானி கடைசியாக த்ரிஷா நடிப்பில் தமிழில் வெளியான மோகினி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.