வெளிநாடு சென்ற கமலா ஹாரிஸ்: தன்னை அவமதிப்பதை உணராமல் கைதட்டிய அசௌகரிய தருணம்
வெளிநாடொன்றிற்கு சென்றிருந்த கமலா ஹாரிஸுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காக ஒருவர் பாடல் ஒன்றைப் பாட, மொழி தெரியாததால், அவர் தன்னை அவமதிப்பதை உணராமல் அவருடன் சேர்ந்து கமலா கைதட்டிய சம்பவம் ஒன்று நிகழ்ந்தது.
வெளிநாடு சென்ற கமலா ஹாரிஸ் சந்தித்த அசௌகரிய தருணம்
சமீபத்தில் அமெரிக்க துணை ஜனாதிபதியான கமலா ஹாரிஸ் பியூர்ட்டோ ரிக்கோ நாட்டுக்குச் சென்றிருந்தார். அப்போது, நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக கமலா சமுதாய மையம் ஒன்றிற்குச் செல்ல, அங்கு நின்றுகொண்டிருந்த ஒருவர், ஸ்பானிஷ் மொழியில் பாடல் ஒன்றைப் பாடத்துவங்கியுள்ளார். அவர் கைதட்டிப் பாட, கமலாவும் அவருடன் அவரது இசைக்கேற்ப கைதட்டி ரசித்துள்ளார்.
உடனே கமலாவுடன் சென்றிருந்த அவரது உதவியாளரான பெண் ஒருவர், அந்த நபர், கமலா தன் நாட்டிற்கு வந்ததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அந்தப் பாடலைப் பாடுவதாக கமலாவின் காதில் கூற, கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பதுபோல, உடன் அதிர்ச்சியாகி கைதட்டுவதை நிறுத்தாமல், மெல்ல மெல்ல கைதட்டுவதை நிறுத்தினார் கமலா. அவரது முகத்தில் பெரிய அளவில் மலர்ந்திருந்த புன்னகையும் கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போனது.
இங்கே எதற்காக வந்தீர்கள் கமலா? எங்களுக்கு அதைக் கூறுங்கள், துணை ஜனாதிபதி வரலாறு படைக்க வந்திருக்கிறார், அவர் காலனியைக் குறித்து என்ன நினைக்கிறார் என்பதை அறிய விரும்புகிறோம், பாலஸ்தீனமும் ஹெய்தியும் வாழ்க என்னும் பொருளில் அவர் பாடியது தெரியவரவே, கைதட்டுவதையும் புன்னகைப்பதையும் நிறுத்திக்கொண்டார் கமலா.
வெறும் ஓட்டுக்காக, மொழி தெரியாத ஒரு நாட்டில் போய், அவர்களுக்கு உதவுவதாகக் கூறினால் இப்படித்தான் அவமானப்படவேண்டியிருக்கும் என்னும் ரீதியில் கமலாவை கேலி செய்துவருகிறார்கள் இணையவாசிகள்.