பார்சலில் வரும் விலையுயர்ந்த மோதிரம்: சுவிஸ் பொலிசார் எச்சரிக்கை…
திடீரென உங்களுக்கு தபாலில் ஒரு பார்சல் வந்து, அதில் ஒரு விலையுயர்ந்த மோதிரமோ அல்லது வேறு ஏதாவது ஒரு நகையோ இருந்ததா?
ஏமாந்துவிடாதீர்கள், அது போலி நகை, அது ஒருவகை மோசடி என்கிறார்கள் சுவிஸ் பொலிசார்.
பெண்ணுக்கு தபாலில் வந்த மோதிரம்
பெண்ணொருவருக்கு தபாலில் ஒரு பார்சல் வந்துள்ளது. அதை அவர் பிரித்துப் பார்க்க, அதற்குள் ஒரு மோதிரம் இருந்துள்ளது.
முதலில், அது தன் கணவர் தனக்கு அனுப்பிய பரிசாக இருக்கலாம் என்று அவர் எண்ணியுள்ளார். பிறகுதான் தெரிந்தது ஒரு ஒரு போலி மோதிரம் என்பது.
பொலிசார் எச்சரிக்கை
அது குறித்து அந்தப் பெண் பொலிசாருக்கு தகவலளிக்க, இதுபோல் தங்களுக்கு ஏற்கனவே சில புகார்கள் வந்துள்ளதாகவும், அது ஒருவகை மோசடி என்றும் பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.
அதாவது, தாங்கள் பார்சல் அனுப்பும் வீட்டின் முகவரி உண்மையானது என்பதை உறுதி செய்துகொள்வதற்காக அந்த மோதிரத்தை சில நிறுவனங்கள் அனுப்புவதாகவும், அது உண்மையான முகரிதான் என்பது உறுதியானதும், அமேசான் போன்ற நிறுவனங்களின் இணையதளங்களில் review எழுத அந்த நிறுவனங்கள் அந்த முகவரியைப் பயன்படுத்திக் கொள்வதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.