டெல்லியில் கடும் குளிர்: நர்சரி பள்ளி மாணவர்களுக்கு ஜன., 12-ம் தேதி வரை விடுமுறை
புதுடெல்லி:“கடுமையான குளிர் காரணமாக டெல்லியில் 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான நர்சரி பள்ளிகள் அடுத்த 5 நாட்களுக்கு மூடப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, டெல்லியில் கடும் குளிரால் கடந்த 1-ம் தேதி முதல் விடுமுறை அளிக்கப்பட்டு திங்கள்கிழமை (ஜன.8) திறக்கப்பட இருந்தது.ஆனால் குளிரின் தாக்கம் குறையாததால் விடுமுறை மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
கவுதம்புத் நகரில் உள்ள 1 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 14-ம் தேதி வரை விடுமுறை என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.குளிர்கால விடுமுறை முடிந்து 10-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என சனிக்கிழமை (ஜன. 6) டெல்லி அரசு அறிவித்தது.
ஆனால் சில மணி நேரங்களிலேயே அந்த அறிவிப்பு வாபஸ் பெறப்பட்டது.அதில், ‘தவறாக வெளியிடப்பட்டது’ என, பள்ளிக் கல்வி இயக்குனரகம் விளக்கம் அளித்துள்ளது.
டெல்லி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடும் குளிர் நிலவுகிறது.வெப்பநிலை இயல்பை விட குறைந்து வருவதால், சாலை முழுவதும் பனியால் மூடப்பட்டுள்ளது.
இதுகுறித்து, இந்திய வானிலை ஆய்வு மையம் கூறுகையில், ”பஞ்சாப், ஹரியானா, டெல்லி, சத்தீஸ்கர், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் நிலவும் குளிர், கடும் குளிராக மாறி, அடுத்த 2 நாட்களுக்கு இதே நிலை நீடிக்கும். பின் படிப்படியாக குறையும்.