கண்களை ஏமாற்றும் சவால்: இந்த படத்துல பனிச் சிறுத்தையை 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? ஓபன் சேலஞ்ச்!
Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் விடுக்கும் சாவல் ஒரு கண்ணாமூச்சி விளையாட்டு. ஆப்டிகல் இல்யூஷனுக்கும் கண்ணாமூச்சிக்கும் ஒரே வித்தியாசம், கண்ணாமூச்சியில் உங்கள் கண்கள் கட்டப்பட்டிருக்கும். ஆப்டிகல் இல்யூஷனில் உங்கள் கண்கள் திறந்தே இருக்கும். இரண்டிலும் கண்டுபிடிப்பது கடினம்.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் பனி மலையில் அற்புதமாக மறைந்திருக்கும் பனிச் சிறுத்தையை 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால், ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள்தான் The Greatest of All Times என்று கூறலாம். முயற்சி செய்து பாருங்கள்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் மிகவும் சுவாரசியமானவை. பொதுவாக மனிதர்கள் பார்க்கும் கோணத்தை வைத்து ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் அமைக்கப்படுகின்றன. மனிதர்கள் ஒரு காட்சியை எப்படிப் பார்த்து உணர்ந்து புரிந்துகொள்கிறார்கள் என்பதை அடிப்படையாக வைத்து உருவாக்கப்படுகிறது. நீங்கள் தேட வேண்டிய விலங்கை ஒரு இடத்தில் மறைத்து வைத்துவிட்டு உங்கள் கவனத்தை வேறு ஒரு இடத்தில் ஈர்க்கும் வகையில் இருக்கும்.
இதைத்தான் ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு தந்திரம் என்கிறோம். ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு கண்கட்டி வித்தை. ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு பெருங்குழப்பம். ஆனால், நீங்கள் கொஞ்சம் ஸ்மார்ட்டாக யோசித்தால் ஆப்டிகல் இல்யூஷன் ஒரு சுவாரசியமான பொழுதுபோக்கு விளையாட்டு. இது ஒரு டிஜிட்டல் யுகத்தின் கண்ணாமூச்சி விளையாட்டு.