முகமா? மரமா? முதலில் தெரிவது என்ன? உங்கள் ஆளுமையை தெரிஞ்சுக்கோங்க!

உங்களைப் பற்றி, உங்கள் ஆளுமையைப் பற்றி, உங்கள் குணாதிசியங்களைப் பற்றி உங்களுக்கே தெரியாத பல விஷயங்களை தெரிந்துகொள்ள ஆசையா? அப்படியென்றால் இருக்கவே இருக்கிறது அப்டிகல் இல்யூஷன் டெஸ்ட். ஜாலியாகவும், விளையாட்டுத்தனமாகவும் இருந்தாலும் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் கிரியேட்டிவிட்டி மிக்கவை. உங்களைப்பற்றி நன்றாக புரிந்துகொள்ள இது உதவுகிறது. பாரம்பரியமான ஆளுமைத்திறனை சோதிக்கும் பரிசோதனை போன்றது அல்ல இது. கேள்வி, பதிலாக இல்லாமல் வெறும் படம் மட்டுமே இதிலிருக்கும். ஒருவகையில் புதிர் நிறைந்த விளையாட்டு என்று கூட இதை சொல்லலாம். உங்கள் அறிவுத்திறனை, பார்வைத்திறனை கூட இதன் மூலம் சோதிக்கலாம். ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் இருக்கும் பொருளையோ, மனித உருவத்தையோ அல்லது ஓவியத்தையோ பார்க்கும் போது, நமது மூளை அதை எப்படி எடுத்துக்கொள்கிறது என்பதில் மிகப்பெரிய சவால் நிறைந்துள்ளது. உளவியல் பகுப்பாய்வில் ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் முக்கிய பங்கு வகிப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. இந்தப் படத்தை ஒவ்வொரு கோணத்திலிருந்து பார்க்கும் போதும், நமது மூளை வெவ்வேறு விதமாக எடுத்துக்கொள்கிறது.

இதன் மூலம் ஒருவரின் அறிவுத்திறன், உணர்ச்சி வெளிப்பாடுகள், பிரச்சனைகளை தீர்க்கும் திறன் போன்றவற்றை தெரிந்துகொள்ள முடியும். அப்படியொரு புதிரான படத்தை தான் இப்போது பார்க்கப் போகிறோம். இது டிக்டாக்கில் மிகவும் பிரபலமாக இருக்கிறது. மியா யெலின் என்பவர்தான் இதை உருவாக்கியுள்ளார். கொடுக்கப்பட்டுள்ள ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் உங்கள் பார்வைக்கு முதலில் எது தெரிகிறதோ, அதை வைத்து உங்கள் குணாதிசியங்களை ஆளுமையை வெளிப்படையாக கூற முடியும்.

சிக்கலான சமயத்தில் நீங்கள் எப்படி நடந்து கொள்வீர்கள் போன்ற விஷயங்களை தெரிந்துகொள்ள ஆசையா? இதோ கிழே கொடுத்துள்ள இமேஜை நன்றாகப் பாருங்கள். அதில் மரத்தின் வடிவில் கண்ணைக் மூடிக் கொண்டிருக்கும் முகமும் காட்டில் நிற்கும் மனிதனின் நிழலுறுவமும் உள்ளது. உங்களுக்கு எது முதலில் தெரிகிறது?

மரத்தின் வடிவில் கண்ணைக் மூடிக் கொண்டிருக்கும் முகம்

இந்தப் படத்தில் உங்கள் கண்களுக்கு முதலில் மரத்தின் வடிவில் கண்ணைக் மூடிக் கொண்டிருக்கும் முகம் தெரிந்தால், நீங்கள் எப்படிபட்டவர் தெரியுமா? உங்களை விட அடுத்தவர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பீர்கள். இயல்பாகவே உங்களுக்கு இரக்க குணம் இருப்பதால், உங்களைச் சுற்றியுள்ள நபர்களின் உணர்வுகளை எளிதாக புரிந்துகொள்வீர்கள். அடுத்தவர்களின் மனதிற்குள் புகுந்து அவர்களின் மகிழ்ச்சிகளையும் கவலைகளையும் தெரிந்துகொள்ளும் அரிதான திறன் உங்களிடம் இருக்கிறது. உங்களின் அக்கறயான குணம் அடுத்தவர்களின் சுமையை குறைக்க உதவியாக இருக்கிறது. உங்களைச் சந்திக்கும் அனைவரிடமும் நேர்மறையான தாக்கத்தை உருவாக்குவீர்கள். நீங்கள் செய்யும் செயல்களில் துளியும் சுயநலம் இருக்காது.

காட்டில் நிற்கும் மனிதனின் நிழலுறுவம்

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உங்கள் கண்களுக்கு முதலில் காட்டில் நிற்கும் மனிதனின் நிழலுறுவம் தெரிந்தால், நீங்கள் எப்படிபட்டவர் தெரியுமா? நீங்கள் தொலைநோக்கு பார்வை கொண்டவர். நம்பிக்கை தான் உங்களின் சூப்பர் பவர். இனி தான் நமக்கு நல்ல காலம் பிறக்கப் போகிறது; இனி தொட்டதெல்லாம் துலங்கும் என்பதில் அசையாத நம்பிக்கை வைத்திருப்பீர்கள்.

நான் சிந்திப்பதால் தான் உயிரோடு இருக்கிறேன் என்ற வாசகத்திற்கு ஏற்ப வாழும் நீங்கள், உயரமான மலை உச்சி முதல் ஆழமான கடல் வரை உங்கள் கனவுகளுக்கு எல்லையே இல்லை. இதையெல்லாம் அடைவது சாத்தியமே இல்லை என பிறர் கூறினாலும், அதற்கான எல்லா யுக்திகளையும் உங்கள் மூளை ஏற்கனவே தயார் செய்து வைத்திருக்கும். நீங்கள் கடுமையான போராட்ட குணம் மிக்கவர். ஒவ்வொரு தோல்விகளையும் படிக்கட்டாக மாற்றி உங்கள் இலக்கை நோக்கி வெற்றிகரமாக சென்று கொண்டிருப்பீர்கள்.

 

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *