Fact Check: அயோத்தி ராமர் கோயிலுக்கு 33 கிலோ தங்கம் நன்கொடை கொடுத்த முகேஷ் அம்பானி, நீதா அம்பானி..?!
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் ஜனவரி 22 ஆம் தேதியன்று புதிய ராமர் கோயில் திறப்பு விழா நடைபெறுகிறது.
பிரதமர் நரேந்திர மோடி இந்தக் கோயிலை திறந்து வைக்கிறார். திறப்பு விழாவுக்கு முன்பாக ஜனவரி 16 ஆம் தேதியில் இருந்து ஆகம வேள்விகள் தொடங்கும்.ஸ்ரீ ராமர் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ர டிரஸ் இந்த விழாவை ஏற்பாடு செய்துள்ளது. ஜனவரி 22 ஆம் தேதியன்று ராமர் கோயிலில் மூலவர் சிலை பிரதிஷ்டை செய்யப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் லட்சக்கணக்கானவர்கள் வந்து கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பக்தர்கள் வந்து தங்கியிருக்க வசதியாக அயோத்தியில் பல இடங்களில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.அத்துடன் மருத்துவ சிகிச்சைகளுக்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. கோயில் திறப்பு விழாவை முன்னிட்டு புனித சரயு நதியில் நீர்வழி மெட்ரோ போக்குவரத்து தொடங்குகிறது. அயோத்தியின் முக்கியப் பகுதிகளை இந்த நீர்வழி மெட்ரோ இணைக்கின்றது.முன்னதாக அயோத்தியில் மகரிஷி வால்மீகி சர்வதேச விமான நிலையத்தையும், புதிதாக சீரமைக்கப்பட்ட அயோத்தி ரயில் நிலையத்தையும் பிரதமர் நரேந்தி மோடி திறந்து வைத்தார். புதிய ராமர் கோயில் திறப்பு விழாவில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத், பாபா ராம்தேவ், முகேஷ் அம்பானி, ரத்தன் டாடா, உள்பட 3000க்கும் மேற்பட்ட விவிஐபிகள் பங்கேற்க உள்ளனர்.இந்த நிலையில் நாட்டின் மிகப் பெரும் பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியும் அவரது மனைவி நீதா அம்பானியும் ராமர் கோயிலுக்கு 3 தங்க கிரீடங்களை நன்கொடையாகத் தந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த கிரீடங்களின் மொத்த எடை 33 கிலோ என இந்தத் தகவல் சோசியல் மீடியாவில் வைரல் ஆகியுள்ளது. இதற்காக அம்பானியின் குடும்பத்துக்கு பாராட்டுகளும் குவிந்து வருகின்றன. அயோத்தியில் புதிய மசூதி.. அடுத்த ஆண்டு அடிக்கல் நாட்டு விழா நடத்த திட்டம்..!முகேஷ் அம்பானி அளித்த 33 கிலோ தங்க கிரீடங்கள் குறித்து ஸ்ரீ ராமர் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ர டிரஸ்ட்டிடம் தகவல் கேட்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை முகேஷ் அம்பானி, நீதா அம்பானி தந்ததாகக் கூறப்படும் தங்க கிரீடங்கள் பற்றி அதிகாரப்பூர்வகமாக உறுதி செய்யப்படவில்லை. இது தொடர்பாக முகேஷ் அம்பானி குடும்பத்தில் இருந்து எந்தவித தகவல் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.இதனிடையே கோயிலுக்கு நன்கொடை தந்தவர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி, நீததா அம்பானியின் பெயர்கள் இடம் பெறவில்லை எனக் கூறப்படுகிறது. புதிய ராமர் கோயிலுக்கு உலகெங்கும் இருந்து ஏராளமான நன்கொடைகள் குவந்த வண்ணம் உள்ளது.