Fact Check: துபாய் புர்ஜ் கலிஃபாவில் ராமர்… வைரலாகும் படம்

அயோத்தியில் நிகழும் கும்பாபிஷேக விழாவின் புகைப்படங்களை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். அவற்றில் ஒன்று துபாயின் புர்ஜ் கலிபா கட்டிடத்தின் மீது ராமர் காட்சியளிப்பது போன்று வைரலாகிய படமாகும்.

இந்த புகைப்படம் மிகப்பெரிய அளவில் வைரலாகி, இரண்டு மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை குவித்து, இணையத்தில் பெரும் விவாதத்தைத் தூண்டியுள்ளது எனலாம்.

புர்ஜ் கலிஃபாவில் ராமர்

படத்தில் ராமர் முனிவர் போல் உடையணிந்து, மேலே ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்று எழுதப்பட்டு புர்ஜ் கலிஃபாவில் காட்சியளிக்கப்பட்டுள்ளது.

 உண்மை என்ன?

Google இல் தேடும் போது புர்ஜ் கலீஃபா அதே வெளிச்சத்தில் இருப்பது போன்று இருகிறது. ஆனால் அதில் பகவான் ராமர் படவில்லை.

உலகின் மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலீஃபாவி ஏதாவது நிகழ்வு நிகழ்ந்தால், அது தொடர்பான படங்கள் அதன் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகளில் பகிரப்படும்.

ஆனால் இதுபோன்ற எந்தப் பதிவும் அதன் சமூக வலைதளங்களில் பகிரப்படவில்லை.

இதேபோன்ற சம்பவம் ஏப்ரல் 2023 இல் நடந்தது, ஆனால் அதுவும் போலியானது என்பது குறிப்பிடத்தக்கது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *