நடிகை வித்யாபாலன் பெயரில் சமூகவலைதளத்தில் போலி கணக்கு..!
பிரபல பாலிவுட் நடிகை வித்யாபாலன் தனது படத்தை வைத்துக் கொண்டு சமூகவலைதளத்தில் போலியாக ஒரு கணக்கை உருவாக்கியுள்ளதாகக் கூறியுள்ளார்.
இதுபற்றி அவர் தனது சமூகவலைதளப்பக்கத்தில், ’எனது பெயரில் மர்ம நபர் ஒருவர் வாட்ஸ் ஆப் மூலம் மோசடியில் ஈடுபட்டுள்ளார். வாட்ஸப்பில் எனது புகைப்படத்தை வைத்துக் கொண்டு நான் தான் வித்யாபாலன் எனச் சொல்லி மோசடியில் ஈடுபட்டுள்ளார். இது இப்போது எனக்கு தெரிய வந்துள்ளது. எனவே அது போன்ற நபர்களிடமிருந்து அழைப்பு அல்லது மெசேஜ் வந்தால் அதற்கு பதிலளிக்க வேண்டாம்’ என்று கூறியுள்ளார்.
மேலும், இதுகுறித்து அவரது குழு ரிப்போர்ட் செய்துள்ளதாகவும் இதேபோல ஒரு அக்கவுண்ட் சமூகவலைதளத்திலும் இருப்பதாகவும் தனது உறவினர்கள் மற்றும் நண்பர்களை இந்த ஐடி அச்சுறுத்துவதாகவும் கூறியுள்ளார். இதுபோன்ற விஷயங்களை ஊக்குவிக்க வேண்டாம் எனக் கூறியுள்ளவர் அதை ரிப்போர்ட் செய்யவும் வேண்டுகோள் வைத்துள்ளார்.