புலி குட்டி வளர்க்கும் ‘புகழ்’ : வெளியானது முதல் படத்தின் டீசர்

விஜய் தொலைக்காட்சியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் புகழ். தற்போது குக் வித் கோமாளியின் 4வது சீசனில் கோமாளியாக கலக்கி வரும் புகழின் கதாபாத்திரம் வழக்கம் போல ரசிகர்களை ஈர்த்துள்ளது.

இந்நிகழ்ச்சிகளின் வாயிலாக பெரும் வரவேற்பை பெற்ற புகழ், தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பையும் பெற்றார். இதனைத்தொடர்ந்து அவர் ஹீரோவாக ஒரு படத்தில் நடித்துள்ளார்.

’மிஸ்டர் ஜூ கீப்பர்’ (Mr Zoo Keeper) என டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் உதகை மற்றும் பிலிப்பைன்ஸில் நடந்து முடிந்தன.

இந்த படத்தில் கிராபிக்ஸ் பயன்படுத்தாமல் நிஜ புலியுடன் புகழ் நடித்திருக்கிறார். இந்நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.

“அன்பு காட்டுனா புலி கூட பசுதாங்க” என புகழ் பேசும் வசனம் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த படத்தில் ஒரு புலிக்குட்டியினை காப்பாற்ற பாடுபடுவது போல் புகழ் நடித்து இருக்கிறார். இந்த படத்தில் புகழுடன் இணைந்து நடிகர்கள் ஷிரின், சிங்கம்புலி, மாரிமுத்து, இமான் அண்ணாச்சி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

’மிஸ்டர் ஜூ கீப்பர்’ படத்தின் டீசர் வெளியான சில மணி நேரங்களிலேயே 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வைகளை கடந்தது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *