மனைவியால் பிரிந்த கிரிக்கெட் வீரர்களின் குடும்பங்கள்..கோலி முதல் ஜடேஜா வரை சந்தித்த பிரச்சினைகள்

குடும்பத்தில் பிரச்சனை இல்லாத மனிதனே இல்லை என்று சொல்வார்கள்.அதற்கு கிரிக்கெட் வீரர்களும் விதிவிலக்கு அல்ல. தாய், தந்தை என குடும்பத்துடன் வாழ்ந்து வரும் கிரிக்கெட் வீரர்கள் திடீரென்று மனைவி உள்ளே வந்தவுடன் தன்னை தூக்கி வளர்த்த குடும்பத்தையே பிரிந்து சென்று தனி குடும்பத்திற்கு போய் விடுகிறார்கள்.

இது அவரவர்களுடைய சொந்த விருப்பம் என்றாலும் இந்திய கலாச்சாரத்திற்கு இது முற்றிலும் எதிர்மறையானது. இந்த நிலையில் மனைவியால் பிரிந்த கிரிக்கெட் வீரர்கள் குடும்பங்களை பற்றி நாம் தற்போது பார்க்கலாம்.

இந்த பட்டியலில் முதலிடத்தை பிடித்திருப்பவர் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி. கோலிக்கு அவருடைய தாய், அண்ணன் ஆகியோர் என்றால் அவ்வளவு பிரியம். விராட் கோலிக்கு முதல் தர கிரிக்கெட் விளையாடிய வயதில் இருக்கும் போது அவருடைய தந்தை உயிரிழந்த நிலையில் தாய்தான் அவரை வளர்த்து பெரிய ஆளாக்கினார்.

எப்போதுமே அம்மா பிள்ளையாக இருந்த விராட் கோலி திருமணத்திற்கு பிறகு முற்றிலும் மாறிவிட்டார். மனைவி அனுஷ்கா சர்மா பேச்சைக் கேட்டு அவருக்கு 24 நேரமும் கணவனாக இருப்பதே சிறந்தது என்ற பணியை விராட் கோலி மாறிவிட்டார். தாயுடன் இருந்த விராட் கோலி திடீரென்று மனைவிக்காக மும்பைக்கு சென்று அங்கு தனி குடும்பத்தில் வசித்து வருகிறார்.

ஆனால் தன்னுடைய மகனின் வாழ்க்கை தான் முக்கியம் என்பதற்காக விராட் கோலி தாய் இதற்கு எந்த ஒரு எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. இதனால் எந்த சர்ச்சையும் எழவில்லை. இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்திருப்பவர் முகமது சமி. சமி தன் குடும்பத்துடன் வாழ்ந்து வந்த நிலையில் அவருடைய மனைவி ஹசின் ஜஹான் பேச்சைக் கேட்டு தனி குடும்பமாக வசித்தார்.

தற்போது மனைவிக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டு விவாகரத்தில் போய் முடிந்து இருக்கிறது. இதை அடுத்து தற்போது முகமது சமி தனது தாயுடன் வசித்து வருகிறார். இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்திருப்பவர் ஷிகர் தவான். ஆயிஷா முகர்ஜி என்ற பெண்ணை ஷிகர் தவான் திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் மனைவி ஆஸ்திரேலியா குடிமகன் என்பதால் தன்னுடைய குடும்பத்தை விட்டு ஆஸ்திரேலியாவில் தங்கி ஷிகர் தவான் பார்த்துக்கொண்டார்.

இந்த நிலையில் இருவருக்குமே தற்போது பிரச்சனை ஏற்பட்டு விவகாரத்தில் போய் முடிந்து இருக்கிறது.இதனால் ஷிகர் தவான் தனது தாய் தந்தையுடன் வந்து வாழ்ந்து வருகிறார். தவான் வாங்கிய வீட்டை மனைவி அவர் பெயருக்கு எழுதி கேட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.இந்தப் பட்டியலில் நான்காவது இடத்தைப் பிடித்திருப்பவர் ஹர்திக் பாண்டியா. ஹர்திக் பாண்டியா நட்டாஷா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

இந்த நிலையில் ஹர்திக் தன்னுடைய குடும்பத்துடன் ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில் தற்போது குடும்பத்தை விட்டு பிரிந்து தனது மனைவியுடன் வாழ்ந்து வருகிறார். எனினும் குர்னல் பாண்டியா தன் தாய் உடன் இருந்து வருகிறார். இந்தப் பட்டியலில் தற்போது புதிதாக இணைந்திருக்கிறார். சிஎஸ்கே அணியின் நட்சத்திர வீரர் ஜடேஜா தன்னுடைய மனைவியின் ரிபாபா ஜடேஜாவை திருமணம் செய்து கொண்ட பிறகு குடும்பத்தில் அவ்வளவு பிரச்சனை ஏற்பட்டு இருக்கிறது.

திருமணமான மூன்றாவது மாதத்தில் சொத்தை பிரிக்க சொன்னதால் குடும்பத்தில் பிரச்சனை ஏற்பட்டு இருக்கிறது. இதனால் ஜடேஜா தன் மனைவியுடன் வேறு ஒரு வீட்டில் தனியாக வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று சடேஜாவின் தந்தை தன்னுடைய மருமகளை கடுமையாக விமர்சித்து பேட்டி அளித்திருந்தார். அதனை எதிர்த்து என் மனைவியை நீங்கள் எப்படி திட்டலாம் என்று அவர் பதிலுக்கு திட்டி பேட்டி அளித்திருக்கிறார். இது தற்போது பெரும் சர்ச்சை ஏற்படுத்தியிருக்கிறது.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *