கனேடிய எல்லையில் உடல் உறைந்து மரணமடைந்த குடும்பம்… வெளிநாட்டில் கைதான இந்திய வம்சாவளி நபர்

கனடா எல்லையில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் உடல் உறைந்து மரணமடைந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் தொடர்பில் இந்திய வம்சாவளி நபர் ஒருவரை அமெரிக்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

இந்தியர்கள் நால்வரின் சடலங்கள்
Dirty Harry உட்பட பல்வேறு பெயர்களில் அறியப்படும் ஹர்ஷ்குமார் பட்டேல் என்பவரையே கடந்த வாரம் சிகாகோ விமான நிலையத்தில் அதிகாரிகள் கைது செய்துள்ளனர். அவர் மீது சட்டவிரோதமாக ஆட்கடத்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டுள்ளது.

கனடா அமெரிக்க எல்லையில் இந்தியர்கள் நால்வரின் சடலங்கள் மீட்கப்பட்ட விவகாரத்தில் கடந்த 2022ல் கைதான Steve Shand என்பவருக்கும் இந்த பட்டேலுடன் தொடர்பிருப்பதாகவே நீதிமன்ற ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியர்களை சட்டவிரோதமாக அமெரிக்காவுக்கு கடத்தும் நடவடிக்கையை பட்டேல் மிக ரகசியமாக முன்னெடுத்து வந்துள்ளதாகவே பொலிசார் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், பனிப்பொழிவு இருப்பதால், அதற்கான உடையுடன் எல்லை கடப்போரை ஆயத்தப்படுத்த வேண்டும் என்றும் பட்டேல் Steve Shand என்பவரிடம் குறிப்பிட்டுள்ளதும் விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

கனேடிய எல்லையில்
2021 டிசம்பர் முதல் 2022 ஜனவரி வரையில் 5 முறை இந்தியர்களை சட்டவிரோதமாக எல்லை கடத்தியுள்ளதாக Steve Shand ஒப்புக்கொண்டுள்ளார். கனடா எல்லையில் 2022 ஜனவரி 19ம் திகதி குஜராத்தை சேர்ந்த நால்வர் கொண்ட குடும்பம் பனியில் உறைந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர்.

ஜெகதீஷ் பட்டேல் குடும்பமானது அதே ஆண்டு ஜனவரி 12ம் திகதி கனடாவின் ரொறன்ரோ பகுதியில் தரையிறங்கியுள்ளனர். அதன் பின்னர் மனிடோபா பகுதிக்கு காரில் புறப்பட்டதுடன், அங்கிருந்து எமர்சன் பகுதிக்கு நடந்து சென்றுள்ளனர்.

இந்த நிலையிலேயே கடும் பனிப்பொழிவு காரணமாக பிஞ்சு குழந்தை உட்பட்ட அந்த நால்வர் குடும்பம் உடல் உறைந்து மரணமடைந்துள்ளது. மேலும், கனேடிய எல்லைப் பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் வாகனம் எதுவும் இல்லை என்று காவல்துறை முன்னதாக கூறியிருந்தது.

இதனால், தொடர்புடைய குடும்பத்தை கனேடிய எல்லையில் இறக்கிவிட்டு, மர்ம நபர் ஒருவர் அங்கிருந்து வெளியேறியிருக்கலாம் என பொலிஸ் தரப்பு அப்போது சந்தேகம் தெரிவித்திருந்தது. தற்போது அந்த மர்ம நபர் Steve Shand என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *