பிரபல நடிகை – நாக சைத்தன்யா ரகசிய காதலா..? – தெளிவான விளக்கம் கொடுத்த பிரபல நடிகை..!!
திரையுலகில் நட்ச்சத்திர ஜோடிகளாக வளம் வந்த சமந்தா – நாக சைத்தன்யா கடந்த 2017-ஆம் ஆண்டு காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர் .
எல்லாம் நல்லபடி சென்றுகொண்டிருக்க தங்களது நான்காவது திருமண நாளுக்கு ஒரு வாரத்திற்கு முன்பாக, அக்டோபர் 2-ஆம் தேதி விவாகரத்து செய்வதாக இருவரும் தனித்தனியே அறிவித்து ரசிகர்களை பேரதிர்ச்சியில் மூழ்கடித்தனர்
இந்நிலையில் நடிகை சமந்தாவின் முன்னாள் கணவரும், நடிகருமான நாக சைதன்யாவுடன் பிரபல நடிகை சோபிதா துலிபாலா ரகசிய காதலில் இருப்பதாக உலா வரும் செய்திகளுக்கு தற்போது தெளிவான விளக்கம் கிடைத்துள்ளது.
ஒரு அளவுக்கு மேல் நெட்டிசன்கள் எல்லைமீறி கமன்ட் செய்து வருவதால் இதுகுறித்து நடிகை சோபிதா ஒரு பேட்டியில் பதிலடி கொடுத்துள்ளார்.உண்மை என்னவென்று தெரியாமல் பேசுபவர்களுக்கு நான் பதில் சொல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை. நான் எந்த தவறும் செய்யாதபோது, அதைப் பற்றிய விளக்கத்தை நான் ஏன் கொடுக்க வேண்டும் என கடும் கோபமாக பதில் அளித்துள்ளார்.