பிரபல பாடகி மல்லிகா ராஜ்புத் தற்கொலை..!
பாலிவுட் பின்னணி பாடகி மல்லிகா ராஜ்புத் (35) என்ற விஜயலட்சுமி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நேற்றிரவு வீட்டில் அனைவரும் தூங்கி கொண்டிருந்த போது, தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதாக குடும்பத்தினர் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளனர்.
தற்கொலைக்கான காரணம் குறித்து இதுவரை தெரியாததால், போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே இறப்புக்கான சரியான காரணம் தெரியவரும்.