கோவையில் பிரபல ஸ்டார்பக்ஸ் காபி ஷாப் ஆரம்பம்..!

கோவையில் ஐ.டி கம்பெனிகள் டைடல் பார்க், சரவணம்பட்டி ஆகிய பகுதிகளில் இயங்கி வருகின்றன. சமீபத்தில் கூட, இன்போசிஸ் (Infosys) தனது அலுவலகத்தை இங்கே விரிவாக்கம் செய்துள்ளது. மேலும் சிறிய அளவில் முதலீடு போட்டு ஆரம்பிக்கப்படும் பல ஸ்டார்ட் அப்களும் செயல்படுகிறது.

இங்கு வணிகத்தை பெருக்கும் வகையில் பல நிறுவனங்கள் தங்களது முதலீட்டை செய்து வருகின்றன. இதனால் கோவை மாவட்டம் மேலும் அசுர வளர்ச்சி அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. சில நாட்களுக்கு முன்பு ஒன்பது திரையரங்குகளை கொண்ட பிராட்வே சினிமாஸ் கோவை கே.எம்.சி.ஹெச் அருகில் திறக்கப்பட்டது. இதில் தென் இந்தியாவில் லேசர் டெக்னாலாஜியுடன் கூடிய, முதல் ஐமேக்ஸ் (IMAX) திரை அரங்கமும் உள்ளது.

இந்நிலையில் அமெரிக்காவின் பிரபல காபி நிறுவனமான ஸ்டார் பக்ஸ் நிறுவனம் சமீபத்தில் கோவையில் துவங்கப்பட்டுள்ளது.லக்ஷ்மி மில் பகுதியில் ஸ்டார்பக்ஸ் நிறுவனம் தொடங்கி உள்ளது. நேற்றுமுன்தினம் மிகப்பிரம்மாண்டமாக தொடங்கப்பட்ட ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தில் 180 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை காபி விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் திறக்கப்பட்ட நாள் முதல் கூட்டம் அலைமோதி வருகிறது.

லுலு திறக்கப்பட்ட நாள் முதல் இன்று வரை கூட்டம் அலைமோதிய வண்ணம் வரை இருப்பது போல் தற்போது ஸ்டார்பக்சிலும் கூட்டம் அலைமோதிய வண்ணம் உள்ளது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *