ரசிகர்கள் ஷாக்..! கேப்டன் பொறுப்பில் இருந்து தோனி விலகல்..!
தோனிக்கு தற்போது 42 வயது ஆகிவிட்டதால், அடுத்த சீசனில் அவர் விளையாடுவது கேள்விக்குறியாக இருக்கிறது. இதனால் தாம் இருக்கும்போதே எதிர்காலத்திற்கான அணியை உருவாக்க வேண்டும் என்பதற்காக தோனி இந்த முடிவு எடுத்திருக்கிறார்.
கேப்டன் பொறுப்பில் இருந்து தோனி விலகி இருக்கிறார்.அவருக்கு பதிலாக புதிய கேப்டனாக ருதுராஜ் நியமிக்கப்பட்டிருக்கிறார்.சிஎஸ்கே அணியின் நட்சத்திர வீரரான ருதுராஜ் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் மகாராஷ்டிரா அணியின் கேப்டனாக விளங்கி இருக்கிறார். இதனால் ருதுராஜ், நல்ல தேர்வாக இருப்பார்
கடந்த 2008ஆம் ஆண்டு முதல் தோனி சிஎஸ்கே அணியின் கேப்டனாக இருந்து வருகிறார். இதுவரை 5 ஐபிஎல் கோப்பையை சிஎஸ்கேக்கு தோனி பெற்று கொடுத்துள்ளார்.தோனி கேப்டன் பதவியில் இருந்து விலகி இருப்பது சிஎஸ்கே அணி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.