தமிழக அரசு விரைவு பஸ்களில் கட்டணம் மாற்றியமைப்பு.. போக்குவரத்து கழகம் கொடுத்த விளக்கம்

சென்னை: தமிழகத்தில் அரசு விரைவு பேருந்துகளில் கட்டணம் என்பது ரூ.10 முதல் ரூ.30 வரை உயர்த்தப்பட்டுள்ளதாக புகார்கள் எழுந்தது.

இந்நிலையில் தான் கட்டணம் மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ளதாக எஸ்இடிசி போக்குவரத்து கழகம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

பொங்கல் நேரத்தில் பொதுமக்கள் சென்னையில் இருந்து தங்களின் சொந்த மாவட்டங்களுக்கு சென்றனர். இந்த வேளையில் அரசு விரைவு பேருந்துகளில் வழக்கத்தை விட அதிக கட்டணம் என்பது வசூலிக்கப்பட்டதாக புகார்கள் எழுந்தது.

தமிழகம் உள்பட அண்டை மாநிலங்களில் 1,120 வழித்தடங்களில் எஸ்இடிசி அரசு விரைவு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த டிக்கெட் இயக்க செலவை பொறுத்து நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சுங்கச்சாவடி கட்டண உயர்வு, டீசல் விலை உயர்ந்தாலும் கூட கட்டணம் என்பது அதிகரிக்கப்படவில்லை.

இத்தகைய சூழலில் தான் பொங்கல் சமயத்தில் பொதுமக்களிடம் அரசு விரைவு பஸ்களில் வழக்கத்தை விட அதிக கட்டணம் என்பது வசூலிக்கப்பட்டுள்ளது. அதாவது குறைந்தபட்சம் ரூ.10 முதல் அதிகபட்சமாக ரூ.30 வரை கட்டணம் என்பது வசூலிக்கப்பட்டுள்ளதாக புகார்கள் எழுந்தன. இந்த புகார் தொடர்பாக தற்போது அரசு போக்குவரத்து கழகம் விளக்கம் அளித்துள்ளது.

அதன்படி பயண தூரத்துக்கு ஏற்ப பஸ் டிக்கெட் கட்டணம் என்பது மாற்றியமைக்கப்பட்டுள்ளது. ஒரு குறிப்பிட்ட இடத்துக்கு பல்வேறு வழித்தடங்களில் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் அந்த இடத்துக்கான பயண தூரம் என்பது வேறுபடும். அந்த வகையில் தான் பயண தூரத்தை பொறுத்து டிக்கெட் கட்டணம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது.

மேலும் தென்மாவட்டங்களுக்கு கட்டணம் என்பது குறைக்கப்பட்டுள்ளது. முதலில் சென்னை கோயம்பேட்டில் இருந்து பஸ்கள் இயக்கப்பட்டது. தற்போது கிளாம்பாக்கத்தில் இருந்து தென்மாவட்டங்களுக்கு அரசு விரைவு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதனால் தென்மாவட்ட மக்களுக்கான டிக்கெட் கட்டணம் என்பது குறைக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *