விவசாயிகளுக்கு இந்த தேதியில் பணம் வங்கியில் வந்து சேரும்..!
மத்திய அரசு PM கிசான் திட்டத்தின் கீழ் வருடத்திற்கு ரூபாய் 6 ஆயிரம் வழங்கி வருகிறது. ஆண்டுக்கு மூன்று தவணையாக வழங்கப்படும் இத்திட்டத்தின் கீழ் இதுவரை 15 தவணை விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் பிப்ரவரி மாதம் 16 வது தவணை வழங்கப்படும் என தகவல்கள் வெளியாகியது. அதன்படி இந்த 16 வது தவணை பிப்ரவரி 28ஆம் தேதி விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்பட இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் கிடைத்துள்ளது.
மேலும் இந்த தொகையை பிரதமர் நரேந்திர மோடி விடுவிக்க உள்ளார். இத்திட்டத்தின் கீழ் விவசாயிகள் பயன் பெறுவதற்கு eKYC ஆவணங்களை கட்டாயம் நிறைவு செய்திருக்க வேண்டும் என பலமுறை மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. இந்நிலையில் இன்னும் இரண்டு நாட்களே உள்ளதால் இதை பதிவு செய்யாத விவசாயிகள் உடனடியாக PM Kisan போர்ட்டல் அல்லது அருகில் உள்ள CSC மையத்திற்கு சென்று உடனே பதிவு செய்யும்படி அறிவுறுத்தியுள்ளனர்.