பாலியல் புகாரில் சிக்கிய ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் பிரபலம் வின் டீசல்..!

ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் படங்களின் மூலம் உலகளவில் பிரபலமாக வலம் வருபவர் நடிகர் வின் டீசல். ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் 10 பாகங்களை கடந்து பாக்ஸ் ஆபிசில் சாதனை படைத்தது வரும் வின் டீசல் தான் நடிக்கும் ஒரு படத்திற்கு 200 கோடி முதல் 300 கோடி வரை சம்பளமாக பெறுகிறார்.
56 வயதாகும் இவர், சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் ஒன்றை நடத்தி படங்களை தயாரித்து வருகிறார். உலகளவில் இவருக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இந்த நிலையில் நடிகர் வின் டீசல் மீது அவரது முன்னாள் உதவியாளர் ஆஸ்டா ஜானசன் வெளிப்படையான பாலியல் புகார் ஒன்றை பதிவு செய்து பெரும் பரபரப்பை எற்படுத்தியுள்ளார்.
ஆஸ்டா ஜானசன் பதிவு செய்த புகாரில், ‘ஃபாஸ்ட் ஃபைவ் படத்திற்கான ஷூட்டிங் அட்லாண்டாவில் நடந்த பொது நடிகர் வின் டீசல் அங்கிருந்த ஸ்டார் ஹோட்டல் ஒன்றில் பல பெண்களுடன் ரூம் போட்டு உல்லாசமாக இருந்துள்ளார்.
மேலும், அன்று அதிகாலை புகைப்பட கலைஞர்கள் சிலர் வருவதை அறிந்து அனைத்து பெண்களையும் கிளியர் செய்து கொண்டிருந்தோம். அப்போது அவரை கிளப்பி ஷூட்டிங்கிற்கு அழைத்து செல்லும் பணியை என்னிடம் கொடுத்திருந்தனர். அந்த பெண்கள் எல்லாம் சென்றுவிட்ட பிறகு வின் டீசல் மிகவும் மோசமான முறையில் என்னிடம் நடித்து கொண்டார் என்று கூறியிருந்தார்.
தொடர்ந்து அந்த புகாரில் அவர் குறிப்பிட்டதாவது, என்னை வலுக்கட்டாயமாக பிடித்து இழுத்து தொடக்கூடாத இடங்களில் என்னை கட்டாயமாக தொட்டார் அவரது காம வெறிக்கு நான் இணங்காததால் எனது உள்ளாடைகளை வலுக்கட்டாயமாய் கழட்டி பாலியல் தொல்லை கொடுத்தார்.
தொடர்ந்து நான் அவரின் பாலியல் ஆசைக்கு ஒத்துழைக்காததால் அவரது சகோதரி அடுத்த நிமிடமே என்னை வேலையில் இருந்து நீக்கிவிட்டார் என தனது புகாரில் ஆஸ்டா ஜானசன் குறிப்பிட்டிருந்தார். இந்த புகாருக்கு வின் டீசல் தரப்பில் இருந்து எந்த ஒரு ரியாக்ஷனும் தற்போது வரை வரவில்லை என்று ஹாலிவுட் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.