ஏரியில் உயிரற்ற நிலையில் கண்டெடுக்கப்பட்ட தந்தையும் மகளும்: பொலிசாருக்கு ஏற்பட்டுள்ள சந்தேகம்
பிரான்சில், ஏரி ஒன்றில் ஒரு தந்தையும் மகளும் உயிரற்ற நிலையில் கண்டெடுக்கப்பட்ட நிலையில், அந்த சம்பவம் தொடர்பில் அந்த தந்தை மீது பொலிசாருக்கு சந்தேகம் உருவாகியுள்ளது.
ஏரியில் உயிரற்ற நிலையில் கண்டெடுக்கப்பட்ட உடல்கள்
பிரான்ஸ் பகுதியில் அமைந்துள்ள ஜெனீவா ஏரியில் இரண்டு உடல்கள் மிதப்பதாக வழிப்போக்கர் ஒருவர் பொலிசாருக்கு தகவலளித்துள்ளார்.
பிரான்சிலுள்ள Meillerie என்னும் கிராமத்தின் அருகில் வழிப்போக்கர் ஒருவர் நடந்து சென்றுகொண்டிருந்தபோது, ஜெனீவா ஏரியில் இரண்டு உடல்கள் மிதப்பதைக் கவனித்துள்ளார். உடனடியாக அவர் பொலிசாரை அழைக்க, விரைந்து வந்த பொலிசார், அந்த உடல்களை மீட்டனர்.
அந்த உடல்கள், ஒரு 34 வயது ஆண் மற்றும் அவரது மகளான 2 வயது பெண் குழந்தையுடையவை. அந்த நபருடைய வீட்டை பொலிசார் சோதனையிட்ட நிலையில், அவர் அந்தக் குழந்தையைக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இந்த துயர சம்பவம் தொடர்பாக கொலை வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள் பிரான்ஸ் பொலிசார்.