மாரடைப்பால் தந்தை இறப்பு..பட்டினியால் 2 வயது சிறுவனின் உயிர் பிரிந்தது…எங்கு தெரியுமா..?

இங்கிலாந்தில், 2 வயது சிறுவன் பட்டினியால், இரண்டு வாரங்களுக்கு முன்னர் மாரடைப்பால் பாதிக்கப்பட்டு இறந்து கிடந்த தந்தையின் உடலை கட்டியணைத்து இறந்து கிடந்தான். இது அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்தில் லிங்கன் லிங்கன்ஷைர் நகரில் கென்னத் (60) என்பவர், தனது 2 வயது மகன் பிரான்சனுடன் வசித்து வருகிறார். ஒரு சமூக சேவகர், கென்னத் வீட்டிற்குச் சென்றுள்ளார். இருப்பினும், அவரிடமிருந்து எந்தப் பதிலும் வராததால், வீட்டு உரிமையாளரின் சாவியைப் பயன்படுத்தி சமூக சேவகர் வீட்டிற்குள் நுழைந்த்கார். அப்போது இறந்து கிடந்த தந்தையை கட்டியணைத்து 2 வயது மகனும் இறந்து கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்து சிறுவனின் தாயார் சாரா பீஸ்ஸே, கென்னத்துடனான சண்டைக்குப் பிறகு கிறிஸ்துமஸுக்கு முன் தனது மகனைக் கடைசியாகப் பார்த்ததாகக் கூறினார். 60 வயதான அவர் டிசம்பர் 29க்கு முன்னதாக மாரடைப்பால் இறந்தார் என்று கருதப்படுகிறது. மறுபுறம், 2 வயது குழந்தை நீரிழப்பு மற்றும் பட்டினியால் ஜனவரி 9 அன்று இறந்ததாக கூறப்படுகிறது.
இவர்களை கடைசியாக டிசம்பர் 26 அன்று பார்த்தத்காக கூறப்படுகிறது. கென்னத் ஒரு அபாயகரமான மாரடைப்பால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. மேலும் அவரது 2 வயது குழந்தையை யாரும் கவனித்துக் கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.