பிப்ரவரி 2024 : இம்மாதத்தில் வரும் விசேஷ பண்டிகைகள் மற்றும் விரதங்கள் முழு விபரம் உள்ளே!
பிப்ரவரி ஆங்கில நாட்காட்டியின்படி ஆண்டின் இரண்டாவது மாதம். பிப்ரவரி இந்த ஆண்டு ஒரு லீப் மாதம், எனவே அதற்கு 29 நாட்கள் உள்ளன. இந்த மாசி மாதத்தில் பல சிறப்பு திருவிழாக்கள் மற்றும் விரதங்கள் உள்ளன. பிப்ரவரி முதல் பகுதி தை மற்றும் மாசி மாதம்.
முக்கியமாக, உலகமே எதிர்பார்த்து கொண்டாடும் “காதலர் தினம்” பிப்ரவரி மாதத்தில் தான் வருகிறது. அதனால்தான் என்னவோ, இந்த மாதம் பலருக்கும் பிடித்த மாதமாகும். இன்னும் சொல்லப் போனால், இந்த பிப்ரவரி மாதமானது, அன்பிற்குரிய மாதமாகவும், நேசத்தைக் கொண்டாடும் மாதமாகவும் கருதப்படுகிறது. எனவே, இந்த பிப்ரவரி மாதத்தில் என்னென்ன விசேஷ பண்டிகைகள் மற்றும் விரத நாட்கள், எந்தெந்த தேதி மற்றும் கிழமைகளில் வருகிறது என்பதை குறித்து இங்கு பார்க்கலாம்.
2024 பிப்ரவரி மாதத்தில் வரும் பண்டிகைகள் மற்றும் விரதங்கள் குறித்த விவரங்கள் இதோ…
06, செவ்வாய் – ஏகாதசி விரதம்
07, புதன் – பிரதோஷம்
08, வியாழன் – மாத சிவராத்திரி
09, வெள்ளி – தை அமாவாசை, திருவோண விரதம், சூல விரதம்
10, சனி – பின்பனிக்காலம், சியாமளா நவராத்திரி
11, ஞாயிறு – சந்திர தரிசனம்
12, திங்கள் – சோமவார விரதம்
13, செவ்வாய் – சதுர்த்தி விரதம், கும்ப சங்கராந்தி, கணேச ஜெயந்தி, விஷ்ணுபதி புண்யகாலம்
14, புதன் – காதலர் தினம், வசந்த பஞ்சமி, சபரிமலையில் நடை திறப்பு
15, வியாழன் – சஷ்டி விரதம்
16, வெள்ளி – ரத சப்தமி, பீஷ்மாஷ்டமி, கார்த்திகை விரதம்
20, செவ்வாய் – ஏகாதசி விரதம்
21, புதன் – பிரதோஷம்
24, சனி – பௌர்ணமி, மாசி மகம், பௌர்ணமி விரதம்
28, புதன் – சங்கடஹர சதுர்த்தி விரதம், தேசிய அறிவியல் நாள்.
2024 பிப்ரவரி மாதத்தில் வரும் அஷ்டமி, நவமி, கரி நாட்கள்:
அஷ்டமி : பிப்ரவரி 02 வெள்ளிக்கிழமை மற்றும் பிப்ரவரி 16 வெள்ளிக்கிழமை.
நவமி : பிப்ரவரி 03 சனிக்கிழமை மற்றும் பிப்ரவரி 17 சனிக்கிழமை.
கரி நாட்கள் : பிப்ரவரி 27 செவ்வாய்க்கிழமை, பிப்ரவரி 28 புதன்கிழமை மற்றும் பிப்ரவரி 29 வியாழன்கிழமை.