பிப்ரவரி 27 மாநிலங்களவைத் தேர்தல்… வெளியானது மாஸ் அறிவிப்பு!
அடுத்த மாதம் பிப்ரவரி 27ம் தேதி 15 மாநிலங்களில், 56 மாநிலங்களவை இடங்களுக்கு தேர்தல் நடைப்பெறும் என்று அறிவித்துள்ளது இந்திய தேர்தல் ஆணையம்.
இந்தியா முழுவதும் தற்போது 15 மாநிலங்களில் காலியாகவுள்ள 56 ராஜ்ய சபா உறுப்பினர் பதவிகள் நிரப்பப்படாமல் உள்ளன. இந்த இடங்களுக்கு வருகின்ற பிப்ரவரி 27ம் தேதி தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
உத்தரப் பிரதேசம், பீகார், ஆந்திரா, மத்தியப்பிரதேசம் உள்ளிட்ட 15 மாநிலங்களில் உள்ள 56 மாநிலங்களவை இடங்களுக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. பிப். 8 வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது, பிப்.15 வேட்புமனு தாக்கல் நிறைவடைகிறது. பிப்.27ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. அதிகபட்சமாக உ.பியில் 10 இடங்களுக்கும், ம.பி, மேற்கு வங்கத்தில் தலா 5 இடங்களிலும் தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.