வெளிநாட்டில் சிறுமிக்கு நடந்த பெண் பிறப்புறுப்பு சிதைவு… உதவிய பிரித்தானியர்

ஆப்பிரிக்க நாடு ஒன்றில் மூன்று வயது குழந்தையின் பெண்ணுறுப்பு சிதைக்கப்பட்ட வழக்கில் உதவியதாக குறிப்பிட்டு பிரித்தானிய பெண் ஒருவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
பெண்ணுறுப்பு சிதைக்கப்பட்ட சம்பவம்
ஆப்பிரிக்க நாடான கென்யாவில் கடந்த 2006ல் தொடர்புடைய பெண்ணுறுப்பு சிதைக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. இதில் தொடர்புடைய, தற்போது 40 வயதாகும் Amina Noor என்பவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பிரித்தானிய நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சோமாலியாவில் பிறந்த நூர் வடமேற்கு லண்டனில் உள்ள ஹாரோ பகுதியில் வசித்து வந்துள்ளார். இவரே மூன்று வயது சிறுமியை கென்யாவுக்கு அழைத்து சென்று பெண்னுறுப்பு சிதைவு சிகிச்சையை முன்னெடுத்துள்ளார்.
இந்த நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமி, தமக்கு 16 வயதிருக்கும் போது துணிவுடன் நடந்த சம்பவத்தை பாடசாலை ஆசிரியர் ஒருவரிடம் பகிர்ந்துகொண்டுள்ளது. இதனையடுத்தே, நூர் மீது வழக்கு பதியப்பட்டு, அவர் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சமூகத்தால் சபிக்கப்பட்டு புறக்கணிக்கப்படுவார்
கடந்த ஆண்டு நடந்த விசாரணையில், கென்யாவில் வசிக்கும் சோமாலி வம்சாவளியைச் சேர்ந்த 94 சதவிகிதம் பெண்களும் இந்த செயல்முறையை மேற்கொள்வதாக அம்பலமானது.
இந்த விவகாரம் தொடர்பில் தரவுகளை வெளிப்படுத்த தயங்கிய நூர், இந்த விவகாரத்தில் அவர் பங்கேற்கவில்லை என்றால், தன் சமூகத்தால் சபிக்கப்பட்டு புறக்கணிக்கப்படுவார் என்று அஞ்சியதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், சமூகத்தை மீறி தம்மால் எதையும் செய்துவிட முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.