உடல் சூட்டை தணிக்கும் வெந்தய குழம்பு … இப்படி செய்தால் சுவையோ சுவை!
பொதுவாகவே கோடை காலம் வந்துவிட்டால் உடல் வெப்பத்தால் ஏற்படக்கூடிய பல்வேறு ஆரோக்கிய பிரச்சினைக்ளும் ஆரம்பித்துவிடும்.
கோடை காலத்தில் அதிகளவில் நீர் சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம்.
அதே சமயம் உடலுக்கு குளிர்ச்சியை கொடுக்கும் உணவுகளை முறையாக தெரிவு செய்து சாப்பிட வேண்டியதும் முக்கியத்துவம் பெருகின்றது.
அந்த வகையில் நாம் அன்றாடம் உணவில் வெந்தயம் சேர்த்து சாப்பிடுவது வழக்கம். வெந்தயம் உடம்பிற்கு குளிர்ச்சியைத் கொடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றது.
மேலும், உடம்பில் சர்க்கரையின் அளவை குறைக்க வெந்தயம் பெரிதும் துணைப்புரிகின்றது. இதனால் வெந்தயத்தை குழம்பாக வைத்து சாப்பிட்டால் ஆரோக்கியத்துக்கு மிகவும் உகந்தது.
பல்வேறு நோய்களுக்கு தீர்வு கொடுக்கும் வெந்தயக் குழம்பை சுவையாக எப்படி செய்யலாம் என இந்த பதிவில் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
வெந்தயம் – 2 மேசைக்கரண்டி
கடுகு – 1/4 மேசைக்கரண்டி
சீரகம் – 1/2 மேசைக்கரண்டி
பூண்டு – 10 பற்கள்
சின்ன வெங்காயம் 25
தக்காளிப்பழம் 2
காய்ந்த மிளகாய் 3
கறிவேப்பில்லை – தேவையான அளவு
கொத்தமல்லி இலை சிறிதளவு
மஞ்சள் தூள் மற்றும் குழம்பு தூள் – 2 மேசைக்கரண்டி வீதம்
புளி (எலுமிச்சை அளவு)
உப்பு தேவையான அளவு
பெருங்காயம் சிறிதளவு
செய்முறை
முதலில் வெந்தயம், சீரகம் இரண்டையும் நன்றாக வறுத்து பொடியாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் பாத்திரத்தை சூடாக்கி எண்ணெய் ஊற்றி கடுகு, வெந்தயம், காய்ந்த மிளகாய், பூடு, கருவேப்பில்லை , தக்காளி சேர்த்துக் கொள்ளவும்.
பின்பு தேவையான அளவு உப்பு, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள், குழம்பு தூள் எல்லாம் சேர்த்து நன்றாக கிளறிவிட வேண்டும்.
பின்னர் சிறிது நீர் சேர்த்து அதனுடன் புளி கரைத்த நீரை ஊற்றி முடி சிறிது நேரம் வேக வைக்க வேண்டும்.
கெட்டியான பதத்தில் வரும் வரை மூடி வைக்கவும். பிறகு பொடியாக அரைத்து வைத்த வெந்தயம், சீரகம் தூளை சேர்த்து அதனுடன் கொத்தமல்லி இலையையும் துவி நன்றாக கிளறவும். இப்போது சூப்பரான வெந்தயக் குழம்பு தயார்.